#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல! இதுக்கும் ஃபேமஸ் தான்!!!
  • 17:04PM Jul 16,2019 Puducherry
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 17:04PM Jul 16,2019 Puducherry

இந்தியாவில் கடற்கரைகளுக்கு புகழ் பெற்ற கோவாவிற்கு போக முடியாத சுற்றுலாப் பிரியர்களுக்கு நம் அருகாமையிலேயே இயற்கை எழில் பொங்கும் அழகையும், பல விசித்திரமான கொண்டாட்டங்களையும் தன்னுள் ஒழித்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறது “புதுச்சேரி”. அழகான கடற்கரைகள், பிரெஞ்சு கால கட்டிடங்கள், இயற்கையான குட்டி தீவுகள், back water, boating இப்படி பல சுவாரஸ்யமான அம்சங்களை கொண்டது புதுச்சேரி. ஆனால் இதையும் தாண்டி சுவாரஸ்யமான ஒன்று நம் புதுச்சேரியில் இருக்கிறது, ஆம் அது தான் scuba diving. கடலுக்கு அடியில் ஒரு வினோதமான சுற்றுலாப் பயணம் மேற்கொள்வது தான் இந்த scuba diving. என்ன நம்ப முடியவில்லையா? உண்மையில் இப்படி ஒரு இடம் புதுச்சேரியில் இருக்கிறதா என்று கேட்கின்றீர்களா?. பலமுறை புதுச்சேரிக்கு விசிட் அடிக்கும் அனேக பேர்களுக்கு கூட இது தெரியாமல் இருப்பது தான் ஆச்சர்யமான நிதர்சனம். இந்த scuba diving செய்ய சுமார் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. பிப்ரவரி, ஏப்ரல், செப்டம்பர், நவம்பர் ஆகிய மாதங்கள் தான் இந்த பிசினஸ் சூடுபிடிக்கும் நேரம். சரி புதுச்சேரியில் எங்கெங்கே இந்த scuba diving முறைப்படி செய்யலாம் / கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

12.jpg

#1. Temple Adventure, இது புதுச்சேரியில் Colas nagar என்ற இடத்தில் இருக்கிறது, இங்கே பதினெட்டு மீட்டர் ஆழம் வரை நம்மை கடலுக்குள் அழைத்து செல்கின்றனர். குறிப்பிட்ட கடல் பரப்பின் அடியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கடல் அமைப்புகளை நாம் அங்கே காணலாம். நூறுக்கும் மேற்பட்ட வண்ணமிகு கடல் உயிரினங்களை பார்த்து ரசிக்கலாம்.

#2. Aravind’s Wall, சின்ன சுப்பையா பிள்ளை தெருவில் இருக்கிறது. இந்திய அளவில் scuba diving செய்வதற்கு சிறந்த இடங்களில் ஒன்றாக கருதப்படுவது Aravind’s Wall.

#3. The Hole, சரியாக 2011 ஆவது வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கே முப்பது மீட்டர் ஆழத்திற்கு நம்மை அழைத்து செல்கின்றனர். விவரம் தெரிந்தவர்களை தனியாக அனுப்புகின்றனர். அங்கே நீங்கள் தனியாக நீந்தி சென்று இதுவரை பார்க்காத இடங்களையும், கடல் வாழ் உயிரினங்களையும் பார்த்து ரசிக்கலாம்.

#Scuba Diving இந்த மூன்றும் தான் புதுச்சேரியில் scuba diving செய்வதற்கு சிறந்த இடங்கள், இதே போல 4 corners, Coral shark reef, Ravines, PADI Dive center என நன்கு இடங்கள் இருக்கிறது. விஷயம் தெரிந்தவர்கள் இந்த scuba divingகை தொடர்ந்து செய்யாமல் இருப்பது இதற்கு செலவாகும் தொகையை என்னித்தான் என்கின்றனர் சிலர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top