“தில்லுக்கு துட்டு 2” படத்தை பற்றிய புதிய அப்டேட்!!!
  • 12:11PM Jan 11,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 12:11PM Jan 11,2019 Kodambakkam

கடந்த 2௦16 ஆம் ஆண்டு காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெற்றிபெற்ற ஹாரர் காமெடி திரைப்படம் “தில்லுக்கு துட்டு” முழுக்க முழுக்க காமெடி கலந்த திகில் படமாக உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது படக்குழுவினர் எடுத்து முடித்து விட்டனர். இந்த படம் வெளியாக திரையரங்கங்கள் கிடைக்காமல் தாமதமாகி வருகிறது. நடிகர் சந்தானம் இந்த படத்தை அடுத்து “சர்வர் சுந்தரம்” படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது இந்த தில்லுக்கு துட்டு 2 படத்தின் இயக்குனர் திரு.ராம்பாலா படத்தின் FIRST SINGLE-ளை வெளியிட முடிவெடுத்து உள்ளார். படத்தின் முதல் பாடல் நாளை வெளியிட உள்ளனர் படக்குழுவினர். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரியபடுத்தி உள்ளார் நடிகர் சந்தானம் அவர்கள்.

download (1).png

தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற திரைப்படங்களான “வத்திகுச்சி” மற்றும் “அரிமா நம்பி” போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் திரு.ஷபிர் இந்த படத்திற்கும் இசையமைத்து இருகின்றார். முதல் பாகத்தில் ஒளிப்பத்திவாளராக பணியாற்றிய தீபக் குமார் இந்த படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த மாதம் இறுதியில் படம் வெளிவரும் என எதிர்ப்பார்க்க படுகிறது.

DwjuocDVsAIAopR.jpg

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top