பாகுபலி 3-ல் நடிக்க ஆசைப்படும் ஹாலிவுட் நடிகர்!
  • 17:35PM Mar 09,2019 India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 17:35PM Mar 09,2019 India

இந்திய திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தையும், உலகச் சினிமாவில் இந்தியாவின் மரியாதையையும் உயர்த்திக் காட்டிய திரைப்படம் "பாகுபலி". ராஜமௌலி இயக்கத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இந்தப் பாகுபலி திரைப்படங்கள் கடல் கடந்து பல சாதனைகள் படைத்தன. இந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லையே பாகுபலி உருவாகிவிட்டது. இந்தத் திரைப்படம் இந்தியாவைத் தாண்டி ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பெரும் ரசிகர் கூட்டத்தை உண்டாக்கியது. ஜப்பானில் இந்தத் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட சென்ற இயக்குனர் ராஜமௌலிக்கு ஜப்பான் மக்கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் பாகுபலி திரைப்படத்தின் 3 பக்கம் எடுத்தால் அதில் நான் நடிக்கத் தயார் என்று புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மார்வெல் நிறுவனம் தயாரித்துள்ள "Captain Marvel" திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் சிங்கப்பூரில் நடந்தது. Captain Marvel திரைப்படத்தில் நடித்துள்ள Samuel L Jackson இந்தப் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய இந்திய யூடியூபர் ப்ராஜக்த கோலி, சாமுவேலிடம் நீங்கள் இந்திய திரைப்படங்கள் பார்த்ததுண்டா? என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த சாமுவேல், "நான் பாலிவுட் திரைப்படங்கள் பார்த்துள்ளேன், பாகுபலி திரைப்படத்தின் 3 பக்கம் எடுத்தால் அதில் நான் நடிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். பாகுபலி திரைப்படம் ஹாலிவுட் நடிகர்களையும் பெரும் அளவில் கவர்ந்துள்ளது என்று பாகுபலி திரைப்பட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Top