Misc

யோவ்! யாருயா டைரக்டரு? தமிழ் யூடியூப் சேனலில் இப்படியொரு ரொமான்ஸ் சீன் பார்த்ததே இல்ல! கொல மாஸ் சாரே!

Dec 04 2020 08:39:00 PM

திடீருன்னு நமக்கு ஒரு பவர் வருது. மாதத்தில் ஒரு நாள் பழைய நியாபகம் எதுவும் இருக்காது. கொஞ்சம் யோசிச்சு பாருங்க, அந்த நாள் எப்படி இருக்கும்னு? அப்பா, அம்மாவையே யாருன்னு கேப்போம். படுத்திருக்கும் பெட் கூட வித்தியாசமா தெரியும். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோங்கிற மாதிரி, என்னாச்சி? என்னாச்சி? கேட்டே பொழுதை ஓட்ட வேண்டி இருக்கும். நமக்காவது பரவல, சிங்கிள் மேன் என்பதால், அடிச்சு புடிச்சாவது, ஒரு ரூமில் உருண்டு, புரண்டாவது சமாளித்து விடலாம்.

Junction-Box Avalum-Naanum Web-Series

இதுவே புருஷன், பொண்டாட்டி இருவருக்குமே இப்படி ஒரு நிலை வந்தால், அந்த வீடு எந்த அளவுக்கு ரணகளமாகும்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனும்னு இல்ல. காலையில் பிரெஷ்ஷா எழுந்திருக்கும் போது, உங்க பெட்டில் யாருன்னே தெரியாத ஒரு பெண் படுத்திருந்தால் தூக்கிவாரிப் போடும்ல? அதே போல ஒரு பெண்ணுக்கு அருகில், யாருன்னே தெரியாத ஒரு ஆண் படுத்திருந்தால் கதையே கந்தலாகிப்போகும்.

Junction-Box Avalum-Naanum Web-Series

இவ்வளவு நேரம் நான் சொன்னதை எல்லாம் கற்பனை பண்ணி பார்த்திருப்பீங்க. இதெல்லாம் உண்மையில் நடந்தால் எப்படி இருக்கும்னு பார்க்க மனசு ஏங்குமே. அந்த ஏக்கமே வேண்டாம். அந்த புருஷன்-பொண்டாட்டிக்கு இடையே என்ன நடக்குதுன்னு அடுத்து வரப்போகும் வீடியோவில் லைவ்வா பார்க்கலாம். என்ஜாய் கைஸ்!