#Mysore pak: மைசூர் பாக்கில் "மைசூர்" இல்லையா? இவ்வளவு நாள் நம்மள எப்படி ஏமாத்தி இருக்காங்க பாருங்க!
  • 03:16AM Oct 28,2019 Mysuru
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 03:16AM Oct 28,2019 Mysuru

misri என்பது கல்கண்டை குறிக்கும் சொல். இது பெர்சிய மொழியில் இருந்து வந்தது. ஆங்கிலத்தில் இதனை rock candy என்று கூறுவார்கள். கல்கண்டு என்றால் படிகப்படுத்தப்பட்ட சர்க்கரைக் கட்டி என்று நமக்கு தெரியும். சர்க்கரைக்கு எல்லாம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு இனிப்புச் சுவைக்காக பயன்படுத்தப் பட்ட ஒன்று கல்கண்டு.

தமிழகத்தில் தோன்றிய misri பாகு என்பது misri-யிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்புகளில் ஒன்றாகும். இதற்கு தமிழில் கண்டப்பாகு என்ற பெயரும் உண்டு. கரும்புச் சாற்றின் மூலமாக கிடைத்த வெல்லம், கற்கண்டு, சர்க்கரை ஆகியவற்றை சூடுபடுத்தி இளகவைக்கும் திரவப் பதத்திற்கு 'பாகு' என்று பெயர். அந்த செய்முறையில் வருவது தான் மைசூர் பாகு.

'மிசிரி பாகு; என்று இருந்தது 'மைசிரி பாகு' என்று மாறி, பிறகு 'மைசூர் பாகு' என மருவியது. நாம் நினைப்பதை போல இதற்கும் மைசூருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதே போல misri கொண்டு செய்யப்பட்ட misri-மாவா, misri-பெடா ஆகியவை வட மற்றும் வட-மேற்கு மாநிலங்களில் இன்றும் பெயர் பெற்றிருப்பதை காணலாம்.

தமிழகத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஊருக்கும் ஸ்பெசலான ஒரு உணவு வகை இருக்கும். திருநெல்வேலி அல்வா, ஸ்ரீ வில்லிப்புத்தூர் பால்கோவா என்று. இவை எல்லாம் ஊரின் பெயரை தாங்கி வரும் இனிப்புகள். ஆனால் 'மைசூர் பாகு' விவகாரம் சற்று வித்தியாசமானது. ஊருக்கும், நாம் சொல்லும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. | milkpeda: இந்த மூன்று பொருள் இருந்தால் போதும் அரைமணிநேரத்தில் பால் பேடா ரெடி!

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top