#Right to Information : உங்கள் ஊரில் நீங்களும் ஹீரோ ஆக வேண்டுமா? முன்னேற்றி முன்னேற துடிப்பவர்களுக்கான வழி!
  • 11:16AM May 04,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 11:16AM May 04,2019 Tamil Nadu

தகவல் அறியும் உரிமை சட்டம் Right to Information Act பயன்படுத்துவது எப்படி என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக தங்களின் பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை பற்றிய கேள்விகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தால், அவர் சம்பந்தபட்ட பஞ்சாயத்து அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். Right to Information Act மூலம் தாங்கள் கேட்கும் தகவல்களை பெற முடியும். விண்ணப்பதை அனுப்பும்போது 10 ரூபாய்கான court stamp ஒட்டி அனுப்ப வேண்டும். தனி ஒருவராக அனுப்ப தயக்கமாக இருந்தால், அமைப்பின் சார்பில் அனுப்பலாம். தங்களை யாராவது அலைபேசி மூலம் உங்களை தொடர்பு கொண்டால், அமைப்பின் மூலம் அனைத்து பகுதிகளில் தகவல் பெறுகிறோம் என கூறவும். இதில் எந்த மாதிரியான கேள்விகள் எல்லாம் கேட்கலாம் என்ற தொகுப்பை இனி அடுத்து காணலாம்.

#1. ஊராட்சிக்கு பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் நிதி, பாராளுமன்ற உறுப்பினர் நிதி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து 2011 முதல் 2016 வரை எவ்வளவு நிதி கிடைத்துள்ளது?
#2. ஊராட்சிக்கு 2011 முதல் 2016 வரையில் என்னென்ன நலத்திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது? ஆண்டு வாரியாக தகவல் தேவை?
#3. ஊராட்சிக்கு 2011 முதல் 2016 வரையில் அனைத்து வார்டுகளிலும் நிறைவேற்ற பட்ட நலத்திட்டங்கள் மற்றும் அதற்கு செலவு செய்யப்பட்ட தொகை வார்டு வாரியாக தகவல் தேவை?

#4. ஊராட்சிக்கு 2011 முதல் 2016 வரையில் கிராமப்புற சாலை (தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை) உட்கட்டமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டது? எவ்வளவு நிதி மீதம் உள்ளது? ஒவ்வொரு சாலை வாரியாக செலவு செய்யப்பட்ட நிதி பற்றிய தகவல்கள் தேவை?
#5. ஊராட்சிக்கு 2011 முதல் 2016 வரையில் வைக்கப்பட்டுள்ள பொது குப்பைத்தொட்டிகளுக்கான செலவு எவ்வளவு? ஆண்டு வாரியாக வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கான செலவு எவ்வளவு?
#6. ஊராட்சிக்கு 2011 முதல் 2016 வரையில் பஞ்சாயத்திற்கு கிடைத்த வருமானம் எவ்வளவு? ஆண்டு வாரியாக வருமானம் எவ்வளவு?
#7. ஊராட்சிக்கு 2011 முதல் 2016 வரையில் வீடுகளில் கழிவு நீர் சுத்தம் செய்யும் காண்ட்ராக்ட் விடப்பட்ட நிதி எவ்வளவு? ஆண்டு வாரியாக வருமானம் எவ்வளவு?
#8. 2011 முதல் 2016 வரையில் 1௦௦ நாள் வேலை செய்பவர்கள் மூலம் நிறைவேற்ற பட்ட செயல்கள் என்னென்ன?
#9. ஊராட்சியில் 2011 முதல் 2016 வரையில் ஏரி / குளங்கள் எத்தனை முறை தூர்வார பட்டன? அதற்கு எவ்வளவு நிதி செலவானது?

#Right to Information : இதன் மூலம் உங்கள் ஊரில் மோசடி நடந்தால் கூட எளிதில் கண்டுபிடித்து, அரசின் திட்டங்கள் உருப்படியாக மக்களுக்கு சென்று சேருவதை உறுதிபடுத்திக்கொள்ள முடியும்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top