#Myth: மணப் பெண்ணை வலது கால் வைத்து வரச்சொல்வது ஏன் என்று தெரியுமா?
  • 23:50PM Aug 12,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 23:50PM Aug 12,2019 Kodambakkam

கடிகாரம் ஏன் வலமாகச் சுற்றுகிறது? நாம் ஏன் கோவிலை வலது பக்கமாகச் சுற்றி வருகின்றோம்? இரண்டையும் கொஞ்சம் ஆழமாக ஒப்பிட்டால் நாமே தான் கடிகாரத்தை வலது பக்கமாகச் சுற்றவைத்தவர்கள் என்றும் தோன்றுகிறது. நாம் எந்த சுப காரியத்தையும் வலப் பக்கமாகவே செய்கின்றோம். இடது கையை சுத்தம் செய்யப் பயன்படுத்துவதால் மட்டும் வலது கைக்குப் பெருமை என்று எண்ணி விடக்கூடாது. சிலர் பிறப்பிலேயே இடது கையை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். இப்படிப்பட்ட இடது கைக் காரர்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளனர். இடது கை பழக்கம் கொண்டவர்களை விட வலது கைக்காரர்கள் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்களாம். பெரும்பாலும் இந்த இடது, வலது பழக்கத்தை மிக முக்கியமாக நாம் கடைப்பிடிப்பது, புதிதாக திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வருகைத் தரும் மணப் பெண்ணை வலது கால் எடுத்து வைத்து வர சொல்வது எதற்காக என்று பார்க்கலாம்.

12.jpg

#1. காலம் காலமாக நமது முன்னோர்கள் வலது சாஸ்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். தூங்கி எழும்போது வலது பக்கமாக எழ சொல்வது, வலது கையால் சாப்பிட பழக்குவது, வலது கால் எடுத்து வைத்துத்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்று பல சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

#2. வீடுகளில் குழந்தைகள் இடது கைகளால் ஏதேனும் பொருள்களைக் கொடுத்தாலோ, அல்லது வாங்கினாலோ பெரியவர்கள் அக்குழந்தைகளைக் கண்டிப்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.

#3. வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறுவர்கள் இடது கைகளால் சாப்பிட்டால் அல்லது இடது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் வந்தால் அதை அபசகுனமாகவேக் கருதுவார்கள்.

#4. மனித உடலுக்கு வலது பக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திருமணங்களில் கூட மணப்பெண்ணின் வலது காலை அம்மி மீது எடுத்து வைத்து மெட்டியைப் போட்டுவிட சொல்வார்கள்.

#5. விஞ்ஞான ரீதியாகவும் சரி, மெய்ஞான ரீதியாகவும் சரி, ஆன்மீக சிந்தனையாலும் சரி கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப்பாருங்கள். நமக்கு வலது பக்கம் தான் ஒரு அலாதியான சக்தி இருப்பதாக தோன்றும்.

#6. நமது உடலில் வலது பக்கம் இருக்கும் நரம்புகள் அதிக வீரியத்துடன் செயல்படுவதாகவும், அதனால் தான் வலது பக்கத்தால் நாம் எதை செய்தாலும் இடது பக்கத்தை விட திறம்படவும், நேர்த்தியாகவும் செய்கின்றோம்.

#7. இதனாலேயே நமது வீட்டிற்கு வரும் புதிய மணப்பெண்ணை அவளது வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர சொல்கின்றனர்.

#Myth - தமிழர்களின் மனையடி சாஸ்த்திரமும் இதைத்தான் சொல்கிறது, படிக்கும் குழந்தைகளுக்கு கூட வலது பக்க மூலையில் தான் அதிக தகவல்கள் சேகரிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top