#ReelVsReal: தெரிந்த நடிகர்களின் தெரியாத நிஜ பெயர்கள்!
  • 07:34AM Jun 05,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 07:34AM Jun 05,2019 Kodambakkam

தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருக்கின்றனர். அதில் சிலர் திரைப்படங்களில் அறிமுகமாகும் நேரத்தில் தங்களது நிஜ பெயரில் இல்லாமல் புதிய பெயரில் அறிமுகமாவது உண்டு. அதற்கு காரணம் நடிகரின் நிஜ பெயர் ரசிகர்களின் மனதில் எளிதாக பதியவேண்டும் என்பதனால் தான். சிலரது பெயர் நினைவில் வைத்துக்கொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கும். நமக்கு நடிகரின் முகம் நினைவில் இருக்கும், ஆனால் அவரது பெயர் சட்டென்று நினைவிற்கு வராது. இந்த காரணத்திற்காகவே சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்கள் தங்களது நிஜ பெயர்களை மிக எளிமையான, அதே சமையம் ரசிகர்களை கவரும் பெயர்களாக மாற்றிக் கொள்கின்றனர். சரி தமிழ் சினிமாவில் நமக்கு நன்கு பரிச்சயமான பிரபல நடிகர்களின் நிஜ பெயர்கள் என்ன என்பதனை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

#1. ரசிகர்களால் “புன்னகை அரசி” என்று அழைக்கப்படும் நடிகை ஸ்னேஹா “என்னவளே” என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நிஜ பெயர் “சுஹாசினி ராஜாராம்” என்பதாகும்.

Sneha_at_Un_Samayal_Arayil_Press_Meet-1068x712.jpg

#2. ஆசை ஆசையாய் என்ற படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா இவரது நிஜ பெயர் “அமர் B சவுத்ரி”

jeeva.jpg

#3. அறிந்தும் அறியாமலும் படம் மூலமாக அறிமுகமான நடிகர் ஆர்யாவின் நிஜ பெயர் “ஜம்சத் செதிராகத்”

actor-arya-search-life-partner.jpg

#4. தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என எல்லா மொழி திரையுகளிலும் பிரபல குணச்சித்திர நடிகராக திகழும் நடிகர் திரு.பிரகாஷ்ராஜ் அவர்கள்  இவரது நிஜ பெயர் “பிரகாஷ் ராய்” என்பது தான்.

prakash-raj-770x433.jpg

#5. நடிகர் சூர்யாவின் நிஜ பெயர் “சரவணன் சிவகுமார்” அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவின் நிஜ பெயர் “ஜோதிகா சாதனா”

surya.jpg

#6. தமிழ் சினிமாவில் பன்முக கலைஞராக இருக்கும் நடிகர் தனுஷ் அவர்களது நிஜ பெயர் “வெங்கடேஷ் பிரபு”

31439963947_8c2fa8a5dc_b.jpg

#7. தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் நிஜ பெயர் “டயானா மரியம் குரியன்”

71513837ad1c32f9db1b639022420d9a.jpg

#8. நடிகர் சியான் விக்ரமின் நிஜ பெயர் “கென்னடி ஜான் விக்டர்”

chiyaan-vikram-stills-1_0.jpg

#9. நடிகர் இளையதளபதி விஜய் அவர்களது நிஜ பெயர் “ஜோசப் விஜய் சந்திரசேகர்”

thalapathy63-1542198724.jpg

#10. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களது நிஜ பெயர் “சிவாஜி ராவ் கெக்வாட்”

0_Cd0-2bOgDFpXGZux.jpg

#ReelVsReal இன்னும் பல நடிகர்கள் சமீபத்தில் அவர்களது வெற்றிக்காக சினிமா பெயர்களைக்கூட மாற்றிகொண்டனர். உதாரணத்திற்கு நடிகை லக்ஷ்மி ராய் அவரது பெயரை “ராய் லக்ஷ்மி” என்று மாற்றிகொண்டார். நடிகர் அருண் குமார் தனது பெயரை “அருண் விஜய்” என்று மாற்றிகொண்டார். நடிகர் விஷ்ணு தனது பெயரை “விஷ்ணு விஷால்” என்று மாற்றிகொண்டார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top