#ICCWorldCup2019:உலகக் கோப்பையில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சிக்கு மாறுவதன் பின்னணி என்ன..?
  • 13:53PM Jun 06,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 13:53PM Jun 06,2019 Chennai

உலகக்கோப்பை போட்டி மும்முரமாக நடந்து வரவும் வேளையில் இந்திய அணி தங்களின் Blue ஜெர்சிக்கு பதிலாக ஆரஞ்சு ஜெர்சியில் விளையாடப்போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியாக வந்துள்ளது.

Image result for India in orange jersey

கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு வண்ண ஜெர்சி அணியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற எந்த அணிகளைக் காட்டிலும் இந்திய அணிக்கு வழங்கிய நீலநிற ஜெர்ஸி அவர்களுக்கு மிகப் பெரிய ராசியாகவே விளங்கியது.ரசிகர்களும் இந்திய அணியை 'Men In Blue' செல்லமாக அழைத்து வந்தனர்.

Image result for ICC

இந்நிலையில் தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் ICC புதிய விதி ஒன்றை கொண்டுவந்தது.அதன் படி ஒரு போட்டியில் ஒரே நிற ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்று கூறியுள்ளது.இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளின் ஜெர்ஸியை அனைத்துமே நீல நிறம் என்பதால் இந்த அணிகள் மோதும் போட்டிகளில் எதாவது ஒரு அணி வேறு நிற ஜெர்சியை அனைத்து விளையாட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

Image result for countries with blue jersey cricket

அதே போல் இந்த நான்கு அணிகளில் இங்கிலாந்து அணி மட்டும் தன்னுடைய சொந்த ஜெர்சியில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளதகவும் மற்ற அணிகள் தங்களுக்கான நிறங்களை, அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என ICC கூறியுள்ளது. இதன் படி பார்த்தல் வரும் ஜூன் 30 ஆம் தேதி இங்கிலாந்துடன் நடக்கவிருக்கும் போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சியில் விளையாட வாய்ப்புள்ளது.

Image result for India in orange jersey

இதே போல் பச்சை நிற ஜெர்சியில் விளையாடி வரும் பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளில் பாகிஸ்தானிற்கு மட்டும் பச்சை நிறத்தை விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Top