சம்பந்தமே இல்லாமல் உங்கள் நண்பர் உங்கமேல ரொம்பப் பாசமா இருக்காங்களா..?அதுக்கு இது கூடக் காரணமா இருக்கலாம்..
  • 15:44PM May 17,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 15:44PM May 17,2019 Chennai

வாழ்க்கையில் சந்தோஷமா இருக்கப் பணம் மட்டுமே போதாது.அதையும் தாண்டி நம்மகிட்ட அன்பு செலுத்த சில பேர் தேவை,எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாம நம்ம மேல அக்கறை செலுத்தறவங்க நம்ம அப்பா,அம்மா தான்.இவங்களுக்கு அடுத்தபடியான பார்த்த சில நண்பர்களைச் சொல்லலாம். அதிலும் சிலர் நம்ம மேல ரொம்ப அக்கறை காட்டுவாங்க இதுக்கு அவங்களோட ராசி கூடக் காரணமா இருக்கலாம்.கேட்க கொஞ்சம் ஆச்சரியமா தான் இருக்கும். ஆனால் உண்மை,ஒரு சில ராசியில் பிறந்தவங்க இயற்கையாவே அடுத்தவங்க மேல அதிக அக்கறை காட்டுவாங்க. அவங்கள பத்தி தான் இங்க பார்க்கப்போறோம்..

Related image

#1. மத்தவங்க மேல அன்பு செலுத்தறதுக்காகவே புரிந்தது மாதிரியே இருக்கவங்க தான் கடக ராசிக்காரர்கள்.புடிச்சவங்க மேல அன்பு செலுத்தறது இவங்களோட ரத்தத்திலேயே கலந்திருக்கும்.பிறரோட தேவையைப் புரிஞ்சிட்டு கேட்கறதுக்கு முன்னாடி வந்து உதவுவாங்க.

#2. விக்ரமன் படத்துல வர ஹீரோ மாதிரி மீன ராசிகாரங்க மத்தவங்க மேல ரொம்ப அக்கறையா இருப்பாங்க. அடுத்தவங்களுக்கு ஒண்ணுன்னா உயிரையே கொடுப்பாங்க.

#3. தனுசு ராசிக்காரர்கள் மத்தவங்க மேல ரொம்ப அக்கறையா இருப்பாங்க. கிட்டத்தட்ட மீன ராசிகாரங்க மாதிரியே இவங்களும் மத்தவங்க மேல ரொம்பப் பாசம் காட்டுவாங்க.

#4. மத்த ராசிக்காரர்களை விட மகர ராசிகாரங்க கொஞ்சம் வித்தியாசம். அவங்களோட நண்பர்கள் மீள கூடுதல் கவனம் செலுத்துவங்க குறிப்பா அவங்களோட மனச புரிஞ்சிக்கத் தெரிஞ்சவங்களா இருப்பாங்க.

#5. மீன ராசிகாரங்க விக்ரமன் படத்துல வர ஹீரோ மாதிரினா, துலாம் ராசிகாரங்க நம்ம சமுத்திரக்கனி மாதிரி உங்கள மோட்டிவேட் பண்ணிட்டே இருப்பாங்க.உங்கலோட மோசமான நேரத்துல உங்களுக்குத் துணையா இருப்பாங்க.

உங்க நண்பர்கள் உங்க மேல பாசமா இருக்கறதுக்கு இது தான் காரணம்னு சொல்லல ஆனால் இதும் ஒரு காரணமா இருக்கலாம்னு தான் சொல்றன்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top