#History: அண்ணனுக்கு இந்த காரணத்திற்காகத் தான் தங்கைகள் ராக்கியை கட்டுகின்றனர்!!!
  • 00:13AM Aug 15,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 00:13AM Aug 15,2019 Kodambakkam

ரக்ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்குள் இருக்கும் இனிமையான பந்தத்தை நீடிப்பதற்காகக் கொண்டாடப்படும் ஒரு நாள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எந்த ஒரு பெருவிழாவும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மையமாக வைத்துத்தான் அல்லது அந்த நிகழ்வை கொண்டாடும் நோக்கத்தில் அதை ஒரு பெருவிழாவாக இந்தியர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த ரக்ஷா பந்தன் என்ற ஒரு நாளை கொண்டாடுவதற்கும் பல இதிகாசக் கதைகள் சொல்லப்படுகின்றது. இந்தியாவில் இது ஒரு முக்கியமான நாளாகக் கருதப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால் ரக்ஷா பந்தன் எனும் இந்த விழா மதங்களைத் தாண்டி ஒரு புனித தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

2.jpg

ரக்ஷா பந்தனுக்குத் தொடர்பாக பல கதைகள் உள்ளன அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, பாண்டவர்களின் மனையான திரெளபதி போர்க்களத்தில் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக அவரது புடவையில் ஒரு பகுதியைக் கிழித்து கிருஷ்ணனின் காயத்தில் கட்டினார். இந்த நிகழ்வு கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதனால் திரெளபதியைத் தனது சொந்த சகோதரியாகவே ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார். மேலும் அவர் எல்லா தீய சக்திகளிடம் இருந்தும் எந்த விதமான அசம்பாவிதமும் உனக்கு ஏற்பட்டால் நான் வந்து உன்னை காப்பாற்றுவேன் என்று திரெளபதிக்கு வாக்களித்தார் கிருஷ்ணர். அவர் அளித்த உறுதியை காப்பாற்றும் விதமாக சூதாட்டத்தில் கௌரவர்களிடம் இருந்து திரெளபதியின் மானத்தைக் காப்பாற்றினார்.

5.jpg

எமதர்ம ராஜாவின் தங்கையான யமுனா ஒவ்வொரு சரவண பூர்ணிமா தினத்தன்றும் எமன் கையில் ஒரு மஞ்சள் கயிற்றைக் கட்டி வந்துள்ளார். அது அண்ணன் தங்கைக்குள் இருக்கும் பந்தத்தை நீட்டிக்கும் என்றும் கூறி தனது அன்பின் அடையாளமாக அண்ணனின் கையில் அந்த மஞ்சள் கயிற்றைக் கட்டி வந்துள்ளார் யமுனா. தங்கையின் அன்பை உணர்ந்த எமன் உன்னை நினைத்து எந்த ஒரு தங்கை தனது அண்ணனுக்கு ராக்கி கட்டுகிறாரோ அவரது ஆயுட்காலம் நீடிக்கும் என்ற வரத்தைக் கொடுத்துள்ளார். ஆக தனது அண்ணனின் ஆயுட்காலத்தை நீட்டிக்க தங்கைகள் அண்ணன்களின் கைகளில் ராக்கி கட்டி வந்துள்ளனர். தங்கையின் அன்பை மேலும் வலுப்படுத்த ஏதேனும் ஒரு சிறப்புப் பரிசை தங்கைக்குப் பரிசளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top