ராகுல் காந்தியின் முடிவால் அதிர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள்..
  • 14:43PM Mar 09,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 14:43PM Mar 09,2019 Chennai

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் போட்டியிடுபவர்கள் பட்டியலை அணைத்து கட்சியினரும் மும்முரமாகத் தயாரித்து வருகின்றனர்.இதன் முதல் கட்டமாகக் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் குறித்த பட்டியலை அண்மையில் வெளியிட்டனர்.இதை தொடர்ந்து தமிழகத்திலும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தங்களுக்கான தொகுதியை தேர்ந்தெடுள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையின் புதிய கட்டுப்பாட்டால் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Related image
தமிழகத்தில் திமுகக் கூட்டணியில் 10 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் அணைத்து தொகுதியிலும் முக்கியத் தலைவர்கள் நிற்க முடிவு செய்தனர். தமிழகக் காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் திருச்சியிலும்,சேலம் தொகுதியில் தங்கபாலுவும்,சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் ஸ்ரீநிதி என பல முக்கிய தலைவர்கள் தங்களுக்கான சீட்டை கேட்டுள்ளனர்.

Image result for congress TN leader
இந்நிலையில் காங்கிரஸ் தலைமை,வரப்போகும் தேர்தலில் கட்சியின் மாநில தலைவர்கள் ,முன்னாள் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கியப் பணியில் இருப்பவர்களுக்குச் சீட் வழங்கக் கூடாது என முடிவு செய்துள்ளது.அதோடு தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகச் சீட் கொடுக்கவும் முடிவு செய்துள்ளது.ராகுலின் அதிரடி முடிவால் மூத்த தலைவர்களின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Share This Story

Top