#NewBike: புது பைக் வாங்கபோறிங்களா? அப்ப இத கண்டிப்பா பாருங்க!
  • 18:46PM Apr 19,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 18:46PM Apr 19,2019 Kodambakkam

ஒரு புதிய இருசக்கர வாகனத்தை வாங்கும் பொழுது எந்த மாதிரியான வாகனத்தை வாங்குவது? எந்த வாகனம் நமது பட்ஜெட்டிற்கு சரி வரும்? அது மார்டனாகவும் இருக்கவேண்டுமே? இப்படி பல குழப்பங்கள் நமது மனதில் எழுவது நிச்சையம். இதற்கு காரணம் பலதரப்பட்ட கம்பெனிகளில் எக்கச்சக்கமான புதிய இருசக்கர வாகனங்கள் மார்க்கெட்டில் இறக்கம் செய்யப்பட்டுள்ளதும், எல்லா விளம்பரங்களிலும் இதுதான் தரமான வாகனம் என்று அடித்து கூறுவதும் தான். புதிய இருசக்கர வாகனத்தை வாங்குவதற்கு முன் எந்த அடிப்படையில் அந்த வாகனத்தை வாங்குவது என்று நாம் நினைவில் வைத்துகொள்ள வேண்டிய சில சூப்பர் டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக.

you-will-fall-in-love-with-this-royal-enfield-thunderbird-500-photo-gallery-97585_1.jpg

  1. வாகனத்தை வாங்குவதற்கு முன்பாக அந்த வாகனத்தின் மாடலையும் விலையை பார்க்க வேண்டியது அவசியம். அது நமது பட்ஜெடிற்குள் அது வருகிறதா என்றும் பார்க்கவேண்டும். ஒரு வேலை இந்த மாடல் தான் எனக்கு வேண்டும் என்ற என்னம் இருந்தால் விலையை பொருட்படுத்தாதீர்கள்.
  2. இரண்டவாது இந்த வாகனத்தை எதற்காக நாம் வாங்கவேண்டும் என்று பார்த்துக்கொள்வது, நமது தேவைக்கு ஏற்றார்போல வாகனத்தை வாங்குவது சிறந்தது.
  3. இந்தியாவை பொறுத்தவரை தேர்ந்தெடுக்க பலதரப்பட்ட இருசக்கர வாகனங்கள் இருக்கின்றது. அதில் உங்களுக்கு பொருத்தமான ஐந்து வண்டிகளை Short-list செய்து கொள்வது சிறந்தது. இதனால் தேவையற்ற கடைசி நேர குழப்பங்களை தவிர்க்கலாம்.
  4. நீங்கள் Short-list செய்து வைத்திருக்கும் வாகனங்களை அந்த குறிப்பிட்ட கடைக்கு சென்று Test drive செய்து பாருங்கள். இதனால் நீங்கள் வாங்கப் போகும் வண்டியை அனுபவபூர்வமாக தேர்ந்தெடுக்க முடியும்.
  5. நீங்கள் வாகனம் வாங்கப்போகும் காலத்தை பார்த்துக்கொள்ளுங்கள், தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் வியாபாரத்தை அதிகரிப்பதற்காக பல தள்ளுபடிகளை நீங்கள் பெறலாம்.
  6. வருட இறுதியில் வாகனம் வாங்குவதை தவிர்க்கவும், ஒரு வேலை உங்களது வாகனத்தை மறு விற்பனை செய்ய நினைத்தால் உங்கள் வாகனத்தின் “Year of purchase-சை” அதிகரிக்க அது உதவும்.
  7. நீங்கள் வாங்க தேர்ந்தெடுத்த வண்டியை உங்கள் நண்பர்கள் யாராவது வைத்திருந்தால் அந்த வாகனத்தை பற்றி அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், வாகனத்தின் இதர பாகங்கள் எங்கே கிடைக்கும்? வாகனத்தின் மைலேஜ் போன்ற தகவல்களை தெரிந்துகொள்வது நல்லது.
Top