என்ன ஆனாலும் சரி.. நேரலையில் துணிந்து நின்று அடித்த பிரேமலதா - கொடுத்த ஒரே 'விளக்கம்' திமுக கப்சிப்..!
  • 19:00PM Mar 08,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 19:00PM Mar 08,2019 Tamil Nadu

your image

 

இன்னும் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் கட்சியில் கூட, இத்தனை ஆண்டு காலம் மூத்த தலைவராக பதவி வகித்தாலும், ஒரு சிலருக்கு நேரலையில் பத்திரிக்கை சந்திப்பு என்ற என்றாலே உதறல் எடுத்துவிடும். அப்படியே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த வேண்டிய கட்டாயம் வந்தாலும், முன்னரே கேள்விகள் லீக் செய்யப்பட்டு விடும். அதற்கு ஏற்றவாறு துண்டு சீட்டில் பதில்கள் ரெடிமேடாக தயார் செய்து வைக்கப்பட்டிருக்கும். கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப, பதிலை பார்த்து ஒப்பித்தால் போதுமானது.

இப்படி இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இத்தனை விமர்சனங்களையும் தாண்டி, தனி ஒரு பெண்மணியாக நின்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு காரசாரமாக பதிலளித்துள்ளார் பிரேமலதா. கேப்டன் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை திமுகவின் ஓட்டுகளை சிதறடித்து வருவதில் தேமுதிக-வின் பங்கு அளப்பரியது என்பதால், முதலில் கூட்டணிக்கு வலை வீசி பார்த்தது திமுக. அதன் பிறகு சில உள்ளடி வேலைகளை பார்த்தது, அதிலும் பணிந்து வராத காரணத்தினால், தனக்கே உரித்தான தில்லு முள்ளு பாணியில் சதி மேற்கொண்டுள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் இதே போல ஊடகங்களை ஒன்று திரட்டி பேசினார். அவருக்கு ஒரு ஒரு பெண் தலைவராக துணிச்சலாக முன்வந்து இப்படி ஊடகங்களின் உண்மை நிலையை அவர்களிடமே எடுத்து கூறி, திமுக செய்த உள்ளடி வேலைகள் குறித்து நேரலையில் துணிச்சலாக பேசினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் அவர்களின் இடத்தை நிரப்ப முடியாமல், ஆகச்சிறந்த பெண் தலைவர்களுக்கான இருக்கை இன்னும் வெற்றிடமே காணப்படுகிறது.

தமிழிசை, பிரேமலதா விஜகாந்த் போன்றவர்கள் பத்தோடு பதினொன்றாக உலா வரும் ஒரு சில பெண் அரசியல்வாதிகளை போல இல்லாமல், விமர்சனங்கள் பல வந்தாலும், துணிந்து அதனை எதிர்கொண்டு, தங்களுக்கே உரித்தான பாணியில் பதிலடி கொடுக்கின்றனர். இன்றைக்கு மகளீர் தினம் கொண்டாடப்படும் வேளையில், ஊடகங்களை வசை பாடினார் என்று விமர்சிக்கப்படும் பிரேமலதா விஜயகாந்த், ஏன் அவ்வாறு செய்தார் என்று ஆராய தொடங்கினாலே அது நாம் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையாக அமையும். உண்மைகள் உரு தெரியாமல் அழிக்கப்படுகின்றன. பொய்கள் ஊதி பெரிதாக்கப்படுகின்றன. இதுவே இன்றைய அரசியலின் நிதர்சன உண்மை.

Share This Story

முருகானந்தம்

Top