#ChildBirth: கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்
  • 11:27AM Apr 20,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:27AM Apr 20,2019 Kodambakkam

கர்ப்ப காலத்தில் கப்பிணி பெண்களுக்கு பலவிதமான சந்தேகங்கள் ஏற்படும், என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் வேகமாக instructionsகளை கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். எல்லா முக்கியமான நேரத்திலும் நாம் செய்வது சரியா என்று மருத்துவர்களை கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களை நாம் அன்றாடம் சந்தித்து கொண்டு தான் இருக்கின்றோம். அதிகப்படியான பணியில் இருக்கும் பெண்கள் தங்களது ஏழு அல்லது எட்டு மாத காலம் வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்கின்றனர். இது ஆபத்துதான் என்றாலும் காலச்சுழற்சியில் வேலைக்கு செல்வதை சிலரால் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. அவர்களுக்கு வரும் ஆபத்துகள் என்னென்ன, எந்த நேரத்தில் அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பிரச்சனைகளை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதனை முதலில் பார்க்கலாம்.

PR-01.jpg

  1. கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவது கூடாது. அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதனால் கரு சிதைவு அல்லது கர்ப்பப்பை கீழிறங்கும் அபாயம் நேரிடும்.
  2. கர்ப்பிணிப் பெண்கள் நெல்லிக்காய், முருங்கக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் அதிகமாக சேர்த்துவந்தால் கை கால்களில் வீக்கம் ஏற்படாமல் பார்த்துகொள்ளலாம்.
  3. ஆப்பிள், மாம்பழம், ரோஜா இதழ், தேன், குங்குமப்பூ, ஏலக்காய், கொத்தமல்லி, ஆகியவைகளை கடைசி மாதம் அதிகமாக எடுத்துகொண்டால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
  4. கர்ப்பப்பை குறைபாடுகளை தவிர்க்க பருத்தி இலைசாறை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை குறைபாடுகள் நீங்கும்.
  5. கருவுற்ற பெண்களுக்கு முதல் திங்கள் அடிவயிற்றில் மிதமான வலி ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். தாமரைப்பூ, சந்தனம், விலாமிச்சை வேர் மூன்றையும் சம அளவு மைய அரைத்து மூன்று நாள் ஒரே வேலை பசும்பாலில் கலந்து கொடுக்க வலி குறையும்.
  6. அன்னாசி பழம், பப்பாளி, எள்ளு, கருஞ்சீரகம், வெல்லம் ஆகியவைகளை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது. அதிக வெப்பம் ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது, இல்லை என்றால் கருசிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
  7. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்படுவது சாதாரணம் தான். இந்த நேரங்களில் லவங்கை பொடியை நீரில் கலந்து அரைமணிநேரம் ஊறவைத்து வடிக்கட்டி அருந்தினால் வாந்தி மயக்கத்தை குறைக்கலாம்.
  8. தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்பால் அதிகம் சுரக்கும், குழந்தை பிறந்ததுமே தாய்பால் கொடுப்பது அவசியம்.
  9. தினமும் இரண்டு நெல்லிக்காய் சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள குழந்தைக்கு அது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
  10. கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது, நல்ல நடைபயிற்சி செய்வது, இனிமையான இசை கேட்பது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.
Top