#New Technology : ஒரு வீடு கூட இனி டாய்லெட் இல்லாம இருக்காது - சில ஆயிரத்துல சிக்குன்னு முடிக்கும் கண்டுபிடிப்பு!
  • 21:11PM Apr 18,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 21:11PM Apr 18,2019 Tamil Nadu

இன்னைக்கு சின்னதா ஒரு வீடு கட்டலாம்னு ஆசப்பட்டாலும், பல லட்சம் கையில இருந்தா தான் முடியுது. சரி லோன் போட்டு ஆச்சும் வீடு கட்டலாம்னு நெனச்சா. அதுக்கு வர வட்டிய கணக்கு போட்டு பக்கும் போது கண்ணே பிதுங்கி வெளிய வந்துரும் போல. நம்ம தகுதிக்கு அளவான வீடு கட்டும், போது லோன், கடன் இந்த மாறி பிரச்சன கழுத்த நெறிக்காது. ஒரு வீடு கட்டனும்னு ஆசப்பட்டா வீட்டோட மதிப்புல பாதிக்கும் மேல நம்ம கையில காசு இருக்கணும். மீதிக்கு நம்மலாள கட்ட முடியும். வருமானம் நிலையா இருக்குனு தெரிஞ்சா மட்டும் லோன் போட்டு கட்டாலம். ஆனா இன்னைக்கு பல பேரு 20 % பணத்த கையில வெச்சுட்டு 80 % லோன் போட்டு கட்டறாங்க. ஆரம்பத்துல வீடு கட்டிட்டோம்னு சந்தோசம் வந்தாலும், லோன் அடைக்க அடுத்து அடுத்து ஓடிக்கிட்டே இருக்கணும். அதனால கொஞ்சம் பணம் இருந்தாலும், நிம்மதியா வாழற அளவுக்கு நம்ம வாழ்க்கை முறைய மாத்திக்கணும்.

அந்த வரிசைல டாய்லெட், பாத்ரூம் கட்டவே சிலர் இலட்சகணக்குல செலவு பண்ணுவாங்க. நகரத்துல இருக்க மக்கள் யோசிக்காம செலவு பண்ணாலும், இன்னும் கிராமத்துல அதுக்கு ஆகுற செலவுக்கு பயந்தே காடு, கம்மா கரை பக்கமா இன்னும் திறந்தவெளியில தான் காலை கடன முடிக்கிறாங்க. மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டம்னு சொல்லி 12 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், அதுக்கும் மேல ஆகுற செலவா நினச்சு இன்னும் கிராம பகுதியில டாய்லெட் கட்ட தயங்குறாங்க.

இப்படி எல்லாம் மக்கள் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கறதால இத எப்படியாச்சும் தடுக்கணும்னு இப்போ புதுசா ஒன்னு கண்டு புடிச்சிருக்காங்க. பொதுவா Precast Concrete முறை யூஸ் பண்ணி ரெடிமேடா சுவர், தொட்டிக்கு போடுற ரிங், தொட்டி மூடி, ஸ்லாப் இதெல்லாம் செஞ்சுட்டு இருந்தாங்க. இதுலயே பெரிய சைஸ் ரிங் மாதிரி செஞ்சு அதுல எதாச்சும் பண்ணா என்னனு யோசிக்கும் போது தான். அதுலயே டாய்லெட், பாத்ரூம் கட்டுற ஐடியாவ உள்ள நுழைச்சிருக்காங்க. இத வெச்சு எங்க வேணாலும் சிம்பிளா ஒரு டாய்லெட்டோ, பாத்ரூமோ ஈசியா கட்டிக்க முடியும்.

இந்த முறையில ரவுண்டு ரிங் மாதிரி ஒரு அமைப்பு ரெடிமேடா கிடைக்கும். அதுல கதவு வைக்கிறதுக்கு ஏத்த மாதிரி ஓட்டை எல்லாமே இருக்கும். வழக்கமா டிரில் பண்ற மாதிரி பண்ணி பைப், வாட்டர் கனெக்சன் எல்லாம் கொடுத்துக்கலாம். இந்த முறையில ஒரு டாய்லெட் கட்டனும்னு நினச்சா ஒரே நாள்ல கட்டி முடிக்க முடியும் அப்படிங்கறது தான் இதோட சிறப்பம்சம். எவ்வளவோ ஆயிரம் செலவு பண்ணி கிராமத்துல தூய்மை இந்தியா திட்டத்துல டாய்லெட் கட்டி கொடுக்கறாங்க. இப்படி ஒரு முறை இருக்குனு தெரிஞ்சா, சில ஆயிரத்துல தரமான டாய்லெட் கட்டிக்க முடியும். நமக்கு தெரிந்த நல்லத நாலு பேருக்கு பகிர்ந்து, அவங்க வாழ்க்கையும் நல்லா இருக்க முயற்சி செய்வோம்.

Share This Story

முருகானந்தம்

Top