#BestMoments: ஓட்டுப்பதிவின் போது பிரகாஷ்ராஜக்கு ஏற்பட்ட ஆச்சர்யம்! விவரம் உள்ளே!
  • 12:26PM Apr 19,2019 Bengaluru
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 12:26PM Apr 19,2019 Bengaluru

வாழ்க்கை சக்கரத்தில் வேகமாக பயணித்து கொண்டிருக்கும் நாம், அவ்வப்போது கடந்து வந்த சில மறக்கமுடியாத அனுபவங்களையும், தருணங்களையும் நினைவு படுத்தி பார்ப்போம். சில சமையம் நாம் அந்த பொன்னான தருணங்களை நினைவு படுத்தி பார்க்க ஒரு எதிர்பாராத வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு வாய்ப்பு கொஞ்சமும் எதிர்பார்க்க முடியாத நிலையில் புகழ்பெற்ற நடிகர் திரு.பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு நடந்துள்ளது. அதும் பொது தேர்தலில் அவரது வாக்கை பதிவு செய்யப்போகும் நேரத்தில் நடந்துள்ளது.

15.jpg

பெங்களூரை தனது பிறப்பிடமாகக் கொண்ட நடிகர் திரு.பிரகாஷ்ராஜ் அவர்கள் இந்த பொது தேர்தலில் பெங்களூரில் தனித்து போட்டியிட்டுள்ளார். ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்த்திருக்கும் கன்னட இளைஞர்களுக்கு ஒரு நல்ல அடையாளமாக பார்க்கப்படுகிறார் பிரகாஷ்ராஜ். நடந்து முடிந்த இரண்டாம் கட்ட பொது தேர்தலில் அவர் ஓட்டுபோட எந்த வித பாதுகாப்பும், பிரபலம் என்ற அலட்டலும் இல்லாமல் பொதுமக்களுடன் சேர்ந்த சாதாரண குடிமகனாக ஓட்டுபோட சென்றார் பிரகாஷ்ராஜ்.

16.jpg

அவர் படித்த “St Joseph’s Indian High school” பள்ளி தான் அவருக்கான வாக்குச்சாவடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு சென்ற பிரகாஷ்ராஜ்க்கு ஏற்பட்டது அந்த அற்புதமான அதிர்ச்சி. அவர் தனது வாக்கை பதிவு செய்ய நாற்பத்தியொரு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர் படித்த அதே வகுப்பிற்குள் நுழைய நேரிட்டது. பல நினைவலைகளில் சிக்கி மீளமுடியாமல் தனது வாக்குப்பதிவை வெற்றிகரமாக முடித்துவிட்டு வெளியேவந்த பிரகாஷ்ராஜ், அவரது டுவிட்டர் பக்கத்தில் இந்த பொன்னான நிகழ்வை பதிவுசெய்துள்ளார்.

Top