#bigboss3: தமிழ் பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த தெலுங்கானா போலீஸ் - கைது செய்யப்பட இருக்கும் போட்டியாளர்.!
  • 14:30PM Jul 03,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:30PM Jul 03,2019 Tamil Nadu

தமிழ் பிக்பாஸ் கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும், இந்தமுறை கொஞ்சம் முன்கூட்டியே சூடு பிடிச்சிருக்கு. அப்போ எல்லாம் ஒரு போட்டியாளர் பிடித்தால் தான் ஆர்மி ஆரம்பிப்பார்கள், இப்போ பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னாடியே லொஸ்லியா ஆர்மி ஆரம்பிச்சு ஆதாகளப்படுதீட்டாங்க நம்ம பிக்பாஸ் இரசிகர்கள். போதா குறைக்கு அவரோட கியூட்டான முகம், குழந்தை தனமான பேச்சு, இலங்கை தமிழில் பேசும் அழகுக்கு ஒரு பெரும் படையே மயங்கி கிடைக்கு.

இப்படி இரசனையோட போயிட்டு இருந்த பிக்பாஸ் வீட்டுல இன்னைக்கு திடீர் ஷாக்கிங்கா போலீஸ் உள்ள போயிருக்காங்க. ஒரு போட்டியாளர் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கறதா சொல்லுறாங்க. முதலில் போலீஸ் உள்ள போன அப்ப, என்ன.? ஏது.?ன்னு தெரியாம அதிர்ச்சியான பிக்பாஸ் வீடு, உண்மை என்னன்னு தெரிஞ்ச அப்புறம் தான், இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கு. இது எல்லாத்துக்கும் காரணம் வனிதா தானாம். வனிதாவோட கணவர் கொடுத்த புகாரின் பேரில் தான் விசாரிக்க தெலுங்கானா மாநில போலீஸ் பிக்பாஸ் வீட்டுக்கே போயிருக்கு.

வனிதாவோட இரண்டாவது கணவர் தான் விஜயகுமார். இவருக்கும் வனிதாவுக்கும் 2007 ஆம் ஆண்டு கல்யாணம் ஆகி இருக்கு. கல்யாணம் ஆகி ரெண்டே வருசத்துல சண்ட போட்டு ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க. இவங்க மகள் பேரு ஜெனிதா. அப்பா, அம்மா பிரிஞ்சாலும், மகள் ஜெனிதா அப்பா விஜயகுமார் கூட இருந்துருக்காங்க. அப்போ ஒரு நாள் ஸ்கூலுக்கு போன ஜெனிதாவ, வனிதா கடத்திட்டு போயிருக்காங்க. என்னோட மகளை வனிதா கடத்திடாங்கன்னு விஜயகுமார் ஹைதராபாத் போலீஸ் கிட்ட புகார் பண்ணி இருக்காரு.

அதுக்கு அப்புறம் வனிதா தலைமறைவா இருந்ததா சொல்றாங்க. இப்போ பிக்பாஸ் 3ல வனிதா கலந்துகிட்டத கேள்விப்பட்டு, தெலுங்கானா போலீசுக்கு சொல்லியிருக்காரு விஜயகுமார். அதனால தான் வனிதாவ கைது செய்ய வந்துருக்காங்க. இப்போ பயங்கரமா வாக்கு வாதம் நடந்துட்டு இருக்கறதா சொல்றாங்க. வனிதா கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. அடுத்து பிக்பாஸ் வீட்டுல என்ன நடக்க போகுதோன்னு ஒரு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கு.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top