#Ooty: ஒரே ஒரு பெட்டிஷன் தான்! இனி சிறிய பிளாஸ்டிக் துண்டகளுக்கு கூட அனுமதி இல்லை!!
  • 16:12PM Jun 26,2019 Ooty
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:12PM Jun 26,2019 Ooty

எனது விடலைப்பருவத்தில் ஒரு முறை ஊட்டிக்கு குடும்பத்துடன் ஒரு அட்டகாசமான ட்ரிப்பை அடித்தோம். நிறைய நொறுக்கு தீனிகளை கையோடு எடுத்துச் சென்றேன், தாத்தா மட்டும் எங்களுடன் வரவில்லை. திரும்பி வந்ததும் என்னை உற்று கவனித்தார், சில வினாடிகளுக்கு பிறகு, “ஏன்டா இங்கருந்து அவ்ளோ கிலோமீட்டர்கள் கடந்து ஊட்டிக்கு போய் குப்ப போட்டுட்டு வரியா?” என்றார். அப்போது கிண்டலாக சொல்கிறார் என்று இருந்தேன். ஆனால் தற்பொழுது மெட்ராஸ் ஹை-கோர்ட் உத்தரவை படிக்கையில் தான் புரிகிறது.

11.jpg

கடந்த சில வருடங்களின் கணக்குப்படி ஒரு வருடத்திற்கு 50 லட்சம் சுற்றுலாப்பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்களாம். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகிக்கொண்டே போகிறது என்றும் கூறுகின்றனர். அத்தனை பெரும் அங்கே போடும் குப்பை மற்றும் கழிவுகள் ஊட்டியை ஊட்டியாக விட்டுவைக்குமா என்ன? ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஊட்டியில் தடை இருக்கிறது ஆனால் இந்த முறை மிகவும் கடுமையான உத்தரவுகளை போட்டுள்ளது Nilgiri District Administration.

14.jpg

இத்தணைக்கும் காரணம் ஒரு உருக்கமான பெட்டிஷன் தான் காரணம் என்கின்றனர் ஊட்டி வாசிகள். வருடா வருடம் ஊட்டி அதிகமாகி வரும் சுற்றுலா பயணிகளால் குப்பை கிடங்காக மாறி வருகிறது என்று அந்த பெட்டிஷனில் குறிப்பிட்டு உள்ளதாகவும் உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். இதன் பேரில் நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம் வரும் ஆகஸ்ட் பதினைந்து முதல் பிளாஸ்டிக்கிற்கு முற்றிலுமாக தடை உத்தரவு போட்டுள்ளது.

12.png

குளிர் பானங்கள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், உணவு பொருட்கள் தரும் பிளாஸ்டிக் கவர்கள் என துண்டு பிளாஸ்டிக்கிற்கு கூட தடை. மீறினால் அபராதம். இது சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அல்ல உள்ளூர் வாசிகளுக்கும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிளாஸ்டிக் பொருட்களை ஊட்டிக்கு எடுத்து செல்ல கூட தடை. இந்த தடை அடுத்து கொடைக்கானலுக்கும் கொண்டுவரப்படும் என்கின்றனர் பலர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top