ஒவ்வொரு ஷாட்டும் உசுப்பேத்தி பண்ண வச்சிட்டாங்க – ரஜினிகாந்த்
  • 17:36PM Jan 11,2019 Kodambakkam
  • Written By Gowri shankar
  • Written By Gowri shankar
  • 17:36PM Jan 11,2019 Kodambakkam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மீண்டும் தனது ரசிகர்களுக்காக செய்திருக்கும் சிறப்பான தரமான சம்பவம் “பேட்ட” திரைப்படம். தனது நூற்றி அறுபத்தி ஐந்தாவது திரைப்படத்திலும் ஒவ்வொரு ரசிகனையும் திருப்தி படுத்திய ஒரே தமிழ் நடிகர் நமது சூப்பர் ஸ்டாராக தான் இருப்பார் என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை எனலாம். அந்த அளவிற்கு இந்திய ரசிகர்களும் இந்திய சினிமா பிரபலங்களும் கூட படத்தை அப்படி என்ஜாய் செய்து ரசித்தும் பாராட்டியும் கொண்டாடியும் வருகின்றனர். இந்த நிலையில் படம் வெளியான பிறகு நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் செய்தியாளர்களுக்கு வீட்டு வாசலில் சிறிய பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

petta-teaser-759.jpg

அந்த பேட்டியில் முதலில் புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லி ஆரம்பித்த நமது சூப்பர் ஸ்டார், “இந்த படம் மக்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அப்டின்னு கேள்வி பட்டேன் ரொம்ப சந்தோஷம். எல்லா பெருமையும் சன் பிக்சர்ஸ் அப்றோம் கார்த்திக் சுப்பராஜ் அந்த யூனிட்டு அவங்களுக்கு தான் பொய் சேரும். ஒவ்வொரு ரசிகரையும் சந்தோஷப்படுத்துறது தான் நம்ம வேல. அவங்களுக்கு பிடிச்சுபோச்சுன்னா சந்தோஷம் தான். ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு சீனும் என்ன உசுப்பேத்தி உசுப்பேத்தி பண்ண வச்சிட்டாங்க” என்று கூறியுள்ளார்.

download.png

Share This Story

You Might Also Like These
Related Stories
Top