வந்த வேகத்தில் கதிகலங்கிய ‘பேய் மாமா’!! Red Card வழங்கிய தயாரிப்பாளர் சங்கம்..
  • 09:43AM Mar 11,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 09:43AM Mar 11,2019 Chennai

Comedy உலகின் நிகராகச் சூப்பர்ஸ்டாராக இருந்த வடிவேலுக்குப் போதாதா காலம் போல் இருக்கிறது.எப்படியாவது ஒரு Comeback கொடுத்திடலாம் என்று காத்திருந்த வடிவேலுக்கு ஆப்பு வைத்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வடிவேலு நடிக்கும் "பேய் மாமா" படத்திற்குத் தயாரிப்பாளர் சங்கம் Red card வழங்கியுள்ளது.

Image result for 24 pulikesi
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு வடிவேலுவின் குளறுப்பிடியால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.படம் எடுக்காததால் தனக்கு 9 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினர்.தயாரிப்பு சங்கமும் வடிவேலுவை சமரசம் செய்யச்சொல்லி படத்தில் நடிக்கக் கேட்டுக்கொண்டது.ஆனால் இப்பொழுது வரை அந்தப் படத்தின் நிலை என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை.பொறுத்து போன வடிவேலு 24 ஆம் புலிகேசி படத்தின் பணியை முடிக்கும் வரை அவருக்கு Red Card வழங்கியது.

Image result for pei mama
இந்நிலையில் திடீரென வைடிவேலு நடிப்பில் "பேய் மாமா" படத்தின் Poster வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.வடிவேலு விவகாரத்தில் இது நாள் வரை அமைதி காத்திருந்த தயரிப்பாளர் சங்கம் படத்தின் இயக்குனரான சக்தி சிதம்பரத்தை கடுமையாகக் கண்டித்தனர்.அடப்போட இப்போ தான் ஆரம்பிச்சான் அதுக்குள்ள இப்படியா என்று படத்தின் பணியைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டார்.

Share This Story

Top