இன்று இந்தியாவை உற்று நோக்கும் உலக நாடுகள்... 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் விறுவிறு..!
  • 11:12AM Apr 11,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 11:12AM Apr 11,2019 India

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில் இன்று தேர்தல் தொடங்கியுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் சீனா இந்தியாவிற்கு முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டாலும், அங்கு சர்வாதிகார ஆட்சியை போல மக்கள் நடத்தப்படுகின்றனர். இதனால் உலகின் பெரிய ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்திய முன்னணி வகித்து வருகிறது. இவ்வளவு பெரிய நாட்டில் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை பல்வேறு நாடுகளும் உன்னிப்புடன் கவனித்துகொண்டு வருகின்றன. அடுத்து இந்தியாவில் அமையும் ஆட்சியை பொறுத்து, பல நாடுகளுக்கும் சாதக, பாதக விளைவுகள் ஏற்பட உள்ளன. அவற்றை கணிப்பதற்கு இந்திய தேர்தலை உற்றுநோக்குவது அவசியமாகிறது.

இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு காலை தொடங்கியது. 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் 25 தொகுதிகள், தெலுங்கானாவில் 17 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் உள்ள 8 தொகுதிகள் என்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்கரில் 1, காஷ்மீரில் 2, மகாராஷ்டிராவில் 7 இடங்களுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது.

சிக்கிம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, திரிபுராவில் தலா 1 தொகுதியிலும், மேகாலயாவில் 2, ஒடிசாவில் 4 இடங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில் மகாராஷ்ட்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாக்களித்தார். மேலும் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் அவரது தொகுதியில் வாக்களித்தார். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ள  நிலையில், அதை குறிக்கும் விதமாக குகூள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் உள்ள 'டூடுள்' அடையாளத்தை மாற்றி உள்ளது. அதன்படி, வாக்களிப்பது போன்ற 'ஒரு விரல் புரட்சி' அடையாளம் வைக்கப்பட்டுள்ளது. 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top