#Palani: திருப்பதி லட்டுக்கு கூட இப்படி இல்ல - சர்வதேச அளவில் கெத்து காட்டிய பழனி பஞ்சாமிர்தம் : வெளியான அசத்தல் அறிவிப்பு!
  • 12:22PM Aug 14,2019 Palani
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:22PM Aug 14,2019 Palani

திருப்பதி போனா லட்டு வாங்கிட்டு வாங்க, திருநெல்வேலி போனா அல்வா வாங்கிட்டு வாங்க, ஸ்ரீ வில்லிபுத்தூர் போனா பால்கோவா வாங்கிட்டு வாங்கன்னு சொல்ற மாதிரி பழனி போனா பஞ்சாமிர்தம் வாங்கிட்டு வாங்கன்னு யாராலையும் சொல்லாம இருக்க முடியாது. அந்த அளவுக்கு ருசிக்கு பேர் போனது பழனி பஞ்சாமிர்தம். வெறும் ருசிக்காக மட்டும் இல்லாம அதுல சேர்க்கப்படும் பொருட்களால் இயற்கையாவே மருத்துவ குணங்களும் இருக்கறதா சொல்றாங்க.

பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்த பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தனி ருசி கொண்டது. மலை வாழைப்பழம் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து, பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது பழனி பஞ்சாமிர்தம். இன்னும் கூடுதல் ருசி வரவேண்டும் என்பதற்காக கற்கண்டும், உலர் திராட்சையும் சேர்ப்பார்கள். கெடாமல் இருக்க வேறு எந்த ரசாயனமும் சேர்க்கப்படுவதில்லை.

இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பஞ்சாமிர்தம் திரவநிலையில் இருந்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட அதனுடன் சேர்க்கப்படுவதில்லை. வாழைப்பழத்தின் கூழ் தான், அதற்கு திரவ தன்மையை கொடுக்கிறது. ஒரு சொட்டு நீர் பட்டாலும், பஞ்சாமிர்தம் கெட்டுப்போய்விடும். இத்தகைய சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்த சிறப்பை பெறும் முதல் கோவில் பிரசாதமாக பஞ்சாமிர்தம் இடம்பெற்றுள்ளது.

ஈரோட்டு மஞ்சள், கொடைக்கானல் மலைப்பூண்டு வரிசையில் தற்போது 29 ஆவதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம். ஏற்கனவே தமிழகத்தில் 28 பொருட்கள் புவிசார்குறியீடு பெற்றுள்ளன. இப்படி புவிசார் குறியீடுகள் பெற்றா பொருட்களை வேறு இடங்களில் தயாரித்து, அதனை சந்தைப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், சின்னாளபட்டி சுங்குடி சேலை, ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு போன்றவை இந்த வரிசையில் அடங்கும். | #Parigaram : எந்த தோஷத்திற்கு எந்த கோவில் செல்ல வேண்டும் ?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top