#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக..! ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..!
  • 13:10PM May 23,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 13:10PM May 23,2019 Chennai

எங்களுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற அளவிற்கு Build Up கொடுத்துவந்த பாமகவும் தேமுதிகவும் இனி வையையே திறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Image result for DMDK pmk

தேர்தல் கனி[புகழின் படி தமிழகத்தில் அதிமுக 8-10 தொகுதிகளிலும், பாஜக 1-2 தொகுதிகளிலும், பாமக 2-4 தொகுதிகளிலும், தேமுதிக 1-2 தொகுதிகளிலும் ஜெயிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.இந்த கணிப்பு ஓரளவிற்குப் பலித்திருந்தாலும் அதிமுகவினர் திருப்தி அடைந்திருப்பார்கள்.ஆனால் மொத்தமாக மண்ணைக்கவ்வியது இந்த இரண்டு கட்சிகளின் எதிர்காலத்தையுமே கேள்விக்குறியாகியுள்ளது.

Related image

தென்மாவட்டங்களில் எங்கள் கொடி தான் என்று கூறி 7 சீட்டுகளைப் பெற்ற பாமக ஒரே ஒரு இடத்தில மட்டுமே முன்னிலை வகிக்கிறது.அன்புமணி போட்டியிட்ட தர்மபுரியை தாண்டி வேறு எந்தத் தொகுதியிலும் பாமக சொல்லும்படியான வாக்குகளைப் பெறவில்லை.அன்புமணியின் வெற்றி கூட இன்னும் உறுதியாகவில்லை,எப்பொழுது வேண்டுமானாலும் நிலை மாறலாம் என்ற நிலையில் தான் அவர்களின் வெற்றி உள்ளது.

Image result for pmk

பாமக இப்படியென்றால் தேமுதிக வேற லெவல்.கூட்டணிக்காக அவர்கள் செய்த அக்கப்போர் சும்மா இல்லை,திமுக அதிமுக என இரண்டு கட்சிகளுமே கதிகலங்க வைத்தது பிரேமலதாவின் பேரம்.இறுதியில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 4 இடங்களில் போட்டியிட்டது.போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் Deposit கூட வாங்கமுடியாத நிலையில் இருப்பது தான் தற்போதைய நிலவரம்.தேமுதிகவின் வாக்குவங்கி எந்த வேகத்தில் எறியதோ அதே வேகத்தில் குறைந்துவிட்டது என்பது தான் கசப்பான உண்மை.

Image result for DMDK

கடந்த தேர்தலை போலவே தமிழகத்தில் திமுக, அதிமுகவை தாண்டி புதிதாக ஒரு சக்தியை வளர்த்து விட மக்களுக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பல ஏமாற்றங்களைத் தந்தாலும் திமுகவின் சக்தியை தமிழகத்தில் நிலைநிறுத்தியுள்ளது. பாமக, தேமுதிக இழந்த இடத்தை மீண்டும் பிடிக்குமா என்பதைக் காலம் தான் முடிவு செய்யும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top