#Engineering: அவுட் ஆஃப் ஃபேஷனாக ஆகிறதா பொறியியல் படிப்பு?
  • 11:34AM Jun 04,2019 Anna University
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:34AM Jun 04,2019 Anna University

இந்த வருடம் தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்காக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்விற்கு (TNEA) வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெறும் ஒரு 1.32 லட்சம் மட்டும் தானாம். இது சென்ற வருடத்தை காட்டிலும் குறைந்துள்ளது என்கின்றனர். சென்ற வருடம் சுமார் 1.59 லட்ச விண்ணப்பங்களே வந்தது என்கின்றனர். பொறியியல் படிப்பிற்கான அட்மிஷனுக்கு அப்ளிகேஷன் கொடுக்க கடந்த மாதம் 31 தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. மே மாதம் 31 ஆம் தேதி அன்று மாலை 7 மணி அளவில் TNEAவிற்கு வந்த விண்ணப்பங்களின் சரியான எண்ணிக்கை 1,32,442 மட்டுமே. தமிழகத்தில் அரசாங்கம் சார்பாகவும், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டும் 500 மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன.

2222.jpg

இந்த கல்லோரிகளில் எல்லாம் மொத்தம் 1.76 லட்ச சீட்டுகள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த எண்ணிக்கைக்கும் மிக குறைவான விண்ணப்பங்களே TNEAவிற்கு வந்துள்ளது. விண்ணப்பங்களே இவ்வளவு தான் என்றால் இந்த வருடம் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் ஒரு லட்சம் தான் இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். கடந்த 2௦16 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1.38 லட்சமாக இருந்தது, 2017ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1.45 லட்சமாக அதிகரித்தது. சென்ற வருடமான 2018 ஆம் ஆண்டில் 1.59 ஆக உயர்ந்தது. ஆனால் இந்த வருடம் மீண்டும் பழைய நிலைமைக்கே திரும்பியுள்ளது.

4444.jpg

இதற்கு முக்கியமான காரணங்களாக “வேலையில்லா திண்டாட்டம்”, “பல கல்லூரிகளில் சரியான பயிற்சி பற்றாக்குறை”, படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லாமல் இருப்பது” போன்றவைகள் கூறப்படுகின்றது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் “vice-chancellor” Tamil Nadu Engineering Admissionsனில் (TNEA) இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Top