#Oscar Nomination: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களா இது? ஐயோ பாவம்!!!
  • 01:45AM Nov 09,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 01:45AM Nov 09,2019 Kodambakkam

உலக அளவில் வெளியாகும் ஹாலிவுட் படங்களைத் தேர்ந்தெடுத்து பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, பிறகு எல்லா விதத்திலும் புகழ் பெற்ற கலைஞர்களுடன் கலந்தாலோசனை செய்துவிட்டு, இது தான் ஆஸ்கர் விருதுனை பெறுவதற்கு தகுதியான படம் என்று வருடா வருடம் “ஆஸ்கர்” என்ற பெயரில் விருது வழங்கி வருகிறது ஹாலிவுட் திரைத்துறை. ஆனால் இவர்களது கோட்பாட்டையும் மீறி பல ஹாலிவுட் படங்கள் ஆஸ்கர் விருது வாங்கிய படங்களை விட உலக அளவில் சாதனை படித்தும் வருகின்றன. ஆனால் உலகத்தில் இருக்கும் மற்ற பிரபலமான சினிமாத்துறைகளையும் கவுரவிக்கும் வகையில் (யாருடைய வம்பு தும்புகளுகும் ஆளாகாமல் இருப்பதற்கும், வாய்க்கால் தகராறுகள் வராமல் தடுப்பதற்கும்) ஆஸ்காரில் “சிறந்த வேற்று மொழி திரைப்படம்” என்று ஒரு விருதினை இணைத்துள்ளது ஹாலிவுட். அப்படி வருடா வருடம் சிறந்த வேற்று மொழி படத்தைத் தேர்ந்தெடுக்க உலக நாடுகள் அனைத்திற்கும், இந்த வருடம் உங்களுடைய நல்ல படங்களை சமர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோளை விடுக்கும் ஹாலிவுட். அந்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா இதுவரை எத்தனை தமிழ் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து ஆஸ்கருக்கு பரிந்துரை செய்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

#1. தெய்வ மகன் – 1969

100.jpg

#2. நாயகன் – 1987

101.jpeg

#3. அஞ்சலி – 1990

102.jpg

#4. தேவர் மகன் – 1992

103.jpeg

#5. குருதிப்புனல் – 1995

104.jpg

#6. இந்தியன் – 1996

105.jpeg

#7. ஜீன்ஸ் – 1998

106.jpg

#8. ஹேராம் – 2000

107.jpg

#Oscar Nomination - இந்த பட்டியலில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பங்கு மிகுதியாகவே இருக்கிறது. இந்த தமிழ் படங்களைத் தவிர்த்து இவரது “சாகர்” (ஹிந்தி) மற்றும் “சுவாதி முத்யம்” (தெலுங்கு) ஆகிய படங்களும் 1985, 1986 ஆம் ஆண்டுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆக 1985, 1986, 1987 என தொடர்ந்து 3 வருடங்களில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் Hat trick அடித்தவர் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள். ஆனால் இதில் எந்த படமும் ஆஸ்கர் விருதினைப் பெறவில்லை என்பது தான் சோகமான தகவல். கடைசியாக நடிகர் தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “விசாரணை” படமும் சமீபத்தில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top