#OrxaEnergies: அடித்து தூள் கிளப்பும் அம்சம் கொண்ட பைக்,எப்போது இந்தியாவில் விற்பனை துவங்கும்?
  • 10:48AM Mar 01,2020 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 10:48AM Mar 01,2020 Chennai

சுற்றுசூழலை பாதுகாக்கும் முயற்சியில் ஒரு பகுதியான E- vehicles பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு உதயமாகியுள்ள நிலையில் இந்திய சந்தையில் Electric motorcycle அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. OrxaEnergies நிறுவனம் இந்தியாவில் தனது முதல் Electric motorcycle-ஐ 'இந்திய பைக் வாரம் 2019' நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. Mantis Electric Motorcycle  ஆனது 'naked-sport motorcycle-ஐ' மாடலாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஒரு மணிநேரத்திற்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தாலே அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இத்தனை சிறப்பு அம்சம் கொண்ட இந்த Electric motorcycle-லின் விற்பனை அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிளுக்கு 9 kWh Battery Pack அளிக்கப்பட்டுள்ளது. இதன் Battery முழுமையாக சார்ஜ் ஆக 3.5 மணி நேரங்களே எடுத்துக்கொள்ளும்.

இந்த பைக் முழுக்க முழுக்க digital dashboard அம்சத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த மோட்டார்சைக்கிள் விவரங்களை குறிப்பிட்ட மொபைல்ஆப் மூலம் கட்டுப்படுத்தும் வசதியும்  வழங்கப்பட்டுள்ளது. இதன் Instrument cluster-இல்  மோட்டார்சைக்கிள் செல்லும் வேகம், பேட்டரியின் நிலை  போன்ற விவரங்களை அவ்வப்போது அறிந்துகொள்ளவும் முடியும்.#PCOD: எந்த ஒரு விஷயத்திலும் நாட்டம் காட்ட முடியவில்லையா? எப்போதும் ஏதோ ஒன்றை இழந்ததை போல உணர்கிறீர்களா?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top