#Online Fraud: ஆஃபரில் வந்த 77 ரூபாய் பிரியாணிக்கு, ரூபாய் 40 ஆயிரத்தை அள்ளி வீசிய சென்னை கல்லூரி மாணவி - சோக பின்னணி.?
  • 12:33PM Jul 05,2019 Chennai
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:33PM Jul 05,2019 Chennai

இப்போ எல்லாருக்குமே சோம்பேறித்தனம் அதிகம் ஆகி போச்சு. வீட்டுல சமைக்க நேரம் இல்லைனா அல்லது சமைக்க சலுப்பா இருந்தா ஹோட்டலுக்கு போயி சாப்பிட்டு வருவாங்க. இப்போ அதுக்கும் சோம்பேறித்தனம் ஆனதால ஆன்லைன் ஆப் மூலமா ஆர்டர் பண்ணி வீட்டுக்கே கொண்டு வர வெச்சு சாப்பிடறாங்க. எந்த அளவுக்கு டெக்னாலாஜி நம்மள நெருங்கி வருதோ, அந்த அளவுக்கு நாம செய்யிற செயல்கள் குறைஞ்சிட்டு இருக்குன்னு அர்த்தம். நம்ம சோம்பேறித்தனம் தான் இன்னைக்கு பல கார்பரேட் கம்பெனிகளுக்கு அள்ளி கொடுக்குற பிசினெஸ்சா இருக்கு.

வெறும் ஒரு ஆப், ஒரு நல்ல பிசினஸ் பிளான், பெருசா முதலீடு எதுவும் இல்ல, ஆனா உலகம் முழுக்க swiggy. zomato நிறுவனம் சக்கை போடு போடுதுனா என்ன காரணம்.? ஒரு டைம் ஹோட்டலுக்கு போக சலுப்பு பட்டுகிட்டு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிட ஆரம்பிச்சுட்டா, பின்னாடி அதுவே ஒரு பழக்கம் ஆயிருமாம. அப்புறம் என்ன பண்ணாலும் நம்மள கண்ட்ரோல் பண்ண முடியாது. ஹோட்டலுக்கு போயி சாப்படறது கஷ்டமா தெரியுமாமா. அதுக்காக தான் முதல் ஆர்டருக்கு ஆஃபர், அதுக்கு அப்புறம் கொஞ்ச நாளுக்கு சின்ன சின்ன ஆஃபர்ன்னு கொடுத்து உள்ள வர வெக்கிறாங்க.

அப்படி ஒரு ஆஃபர் விளம்பரத்துக்கு நம்பி சென்னையில ஒரு காலேஜ் பொண்ணு 40 ஆயிரம் ரூபாய் இழந்து இருக்கு. பிரியாணி 77 ரூபாய்ன்னு பிரபல ஆன்லைன் ஃபூட் ஆப்ல ஒரு ஆஃபர் வந்திருக்கு. அதுல உள்ள போயி ஆர்டர் பண்ணி இருக்காங்க. பணம் பரிமாற்றம் நடக்கும் போது ஆர்டர் கேன்சல் ஆகிருச்சு. ஆனா 77 ரூபாய் பணம் பேங்க் அக்கவுண்டுல இருந்து போயிருக்கு. ஒரு வழியா அந்த ஆப் போன் நெம்பர நெட்ல தேடி பிடிச்சு, அந்த பொண்ணு கால் பண்ணி இருக்கு. அப்போ வெறும் 77 ரூபாய் எல்லாம் refund பண்ண முடியாது. நீங்க 5000 ரூபாய் எங்க அக்கவுண்டுக்கு போட்டு விடுங்க. உங்களுக்கு 5077 ரூபாய் போட்டு விடுறோம்னு சொல்லி இருக்காங்க.

அதையும் நம்பி அந்த பொண்ணு 5000 ரூபாய் போட்டு விட்டுருக்கு. பணம் இன்னும் வரல, வரலன்னு சொல்லிகிட்டே இருந்துருக்காங்க. இந்த பொண்ணும் பல டைம் முயற்சி பண்ணி பார்த்துருக்கு. கடைசியா அந்த பொண்ணோட பேங்க் அக்கவுண்டுல இருந்து 40 ஆயிரம் ரூபாய் போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிருக்கு. என்னமோ தப்பு நடக்குதுன்னு. அதுக்கு அப்புறம் சுதாரிச்சு என்ன பண்ணுறது. இப்போ விசாரிச்சு பாத்தா அது போலி கஸ்டமர் கேர் நெம்பர்ன்னு தெரிய வந்திருக்கு. ஆன்லைன் மோசடி தொடர்பா எத்தன விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டாலும், படிச்சவங்களே இன்னும் ஏமாந்துட்டு தான் இருக்காங்க. | தொண்டக்குழி வரைக்கும் சாப்பாடு ஏறிருச்சு.. ஆனா பில்லு மட்டும் ஏறல

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top