#Factcheck: பீதியை கிளப்பும் பிரிவினைவாதிகள் - காஷ்மீர் மக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனரா? உண்மை இதுதான்!
  • 15:02PM Aug 13,2019 Jammu and Kashmir
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 15:02PM Aug 13,2019 Jammu and Kashmir

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்துக்கு நீக்கப்பட்டதுடன், லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. புத்த மத மக்கள் அதிகம் வாழும் பகுதியான லடாக் தனியே பிரிக்கப்பட்டுள்ளதால் நெடுங்காலமாக அப்பகுதி மக்கள் வைத்து வந்த கோரிக்கை நிறைவேறியுள்ளது. பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள மாவட்டங்களில் மட்டும் பதற்றம் நிலவுகிறது. இதனை சாதகமாக்கிக்கொண்ட பிரிவினைவாதிகள், கடந்த வருடம் எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பரவவிட்டு இப்போது நடந்தது போல சித்தரித்து பதிவிட்டுள்ளனர். இதனை பார்க்கும் மக்கள் பலரும், காஷ்மீர் மக்களை இந்தியா கொல்வது போல நினைத்து உணர்ச்சி பெருக்கெடுக்கின்றனர். ஆனால் அது போலி தகவல் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

இது தான் அந்த போலி வீடியோவா.?

 

மேற்கண்ட வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்த மக்களை தூக்கிசெல்வது இடம்பெற்றுள்ளது. அடுத்து இந்தியா காஷ்மீர் மக்களை கொல்வது போல பொருள்படும் வகையில் பதிவு இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து  ஆராய முற்பட்ட பொழுது, இது 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. முந்தைய காஷ்மீர் மாநிலம் குல்காம் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை தூக்கிசெல்லும் காட்சி தான் அது. இதனை தற்போது நடந்தது போல சித்தரித்து, தேசத்துக்கு எதிராக பிறவினைவாதிகள் மக்கள் உணர்ச்சியை தூண்டி வருகின்றனர்.இது போன்ற தகவல்களை பகிரும் முன்னர், பல முறை ஆராய வேண்டியது அவசியமாகிறது. போலி செய்திகளை என்றைக்கும் ஆதரிக்காதீர்கள். | ஆஃபரில் வந்த 77 ரூபாய் பிரியாணிக்கு, ரூபாய் 40 ஆயிரத்தை அள்ளி வீசிய சென்னை கல்லூரி மாணவி - சோக பின்னணி.?

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top