“ODIYAN” படத்திற்காக மோகன்லால் செய்த காரியம்!!!
  • 20:09PM Dec 05,2018 Thiruvananthapuram
  • Likes
  • 0 Views
  • Shares

மலையாள சூப்பர் ஸ்டார் திரு.மோகன்லால் அவர்கள் முதல் முறை ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் “ODIYAN”. இந்த படம் ஒட்டுமொத்த மலையாள சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் மோகன்லாலுக்கு தந்தையாக நடிக்கிறார் பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர் திரு.அமிதாப்பச்சன் அவர்கள். இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் இதுவரை மோகன்லால் படங்களின் டீசர் ட்ரைலர்களை விட அதிக எண்ணிகையில் YouTube சேனலில் அவரது ரசிகர்களால் பார்க்கப்பட்டிருகிறது. தற்பொழுது இந்த படத்தின் இரண்டாவது பாடல் மேக்கிங் வீடியோ மற்றும் படத்தில் சில காட்சிகளும் இடம் பெரும் பாடல் வீடியோ YouTube சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

Ds8lpuJVsAAKu0L.jpg

இந்த பாடலை நடிகர் மோகன்லால் அவர்களே பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஸ்ரீகுமார் மேனன் அவர்கள் இயக்கியுள்ளார். அவர் மலையாளத்தில் புகழ்பெற்ற விளம்பர இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறை மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் மஞ்சு வாரியார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த “SAM.C.S” இந்த படத்திற்கும் இசையமைத்து உள்ளார்.  படத்தில் BLACK MAGIC என சொல்லப்படும் மாயவித்தை மற்றும் உருவ மாற்றம் செய்யும் மாய மனிதராக நடிக்கிறார் மோகன்லால். வரும் டிசம்பர் பதினான்காம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top