#Baby Care: எந்நேரமும் குழந்தைகள் டயபரில் இருந்தால் என்னமாதிரியான ஆபத்துக்கள் ஏற்படுகிறது பாருங்கள்!!!
  • 19:37PM Nov 02,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 19:37PM Nov 02,2019 Kodambakkam

ஒரு காலத்தில் சிறு குழந்தைகளைத் தூக்கி கொஞ்சும் பொழுது அக்குழந்தைகள் அவர்கள் மீது சிறுநீர் கழித்துவிட்டால் குழந்தையைத் தூக்கியவர்கள் சந்தோஷம் தான் கொள்வார்கள். ஆனால் இன்றோ அதை முற்றிலுமாக பலர் வெறுக்கின்றனர். சிறுநீர் கழித்த அந்த குழந்தையை சிலர் திட்டவும் செய்கின்றனர். ஒன்றுக்கே இப்படி குழந்தைக்கு இரண்டிற்கு வந்துவிட்டால் அவ்வளவு தான் சில பெற்றோர்கள் பிரளையமே வந்தது போல ஆகிவிடுவார்கள். இப்படியான தர்ம சங்கடங்களை சகித்துக்கொண்டு அன்பை காட்டுவது தான் நல்ல பெற்றோர்களுக்கு அழகு. அப்படி அல்லாத பெற்றோர்களுக்கு இருக்கவே இருக்கிறது டயபர். அது அவர்களது பதற்றத்தை குறைப்பதனால் குழந்தைக்கு என்ன ஆனாலும் சரி என்று எந்நேரமும் டயபரிலேயே குழந்தையை போட்டுவிடுகின்றனர்.

22.jpg

#1. ஈரமான டயபரை கவனிக்காமல் அதிக நேரம் விட்டுவிட்டால், குழந்தைகளுக்கு பாக்டீரியா தொற்று, தடிப்புகள் மற்றும் புண் ஆகியவற்றை ஏற்படுத்தும். குழந்தையின் மென்மையான உடலில் டயபரை உபயோகிப்பது அவர்களின் சருமத்திற்கு ஏற்றதல்ல.

#2. டயபரில் ஈரத்தை உறிஞ்சுவதற்கென இரசாயனங்கள், ஜெல்கள் மற்றும் சில வேதிப்பொருட்களை கலப்பதால் அவை குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

#3. பேபி டயபர்கள் சோடியம் பாலியாகிரிலேட் பயன்படுத்தி செய்யப்படுகிறது. மேலும் இதில் நச்சு தன்மை கொண்ட உறிபஞ்சுகள் இருப்பதால், குழந்தைகளுக்கு சில வகையான தொற்று நோய் ஏற்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைகிறது.

#4. குழந்தைகள் டயபரை ஈரம் செய்யும் போது, அதிலிருக்கும் மூலக்கூறுகள் ஈரப்பதத்தை வெளி விடாமல் தடுக்கும். இதனால், டயபர் வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும், அந்த சமயத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்றவை எளிதில் பரவி, குழந்தைகளின் சருமத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.

#5. தூக்கி எறிய கூடிய டயபரில் இருந்து அதிக அழுத்தத்தில் ஆவியாக கூடிய இரசாயங்களான எத்தில் பென்சீன், சொலின், தைலின் போன்றவை இருப்பதால் குழந்தைகளுக்கு நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

#Baby Care - விலை அதிகமாக இருந்தாலும், விளம்பரங்களால் பெற்றோர்கள் அதிகம் ஈர்க்கப்பட்டுகின்றனர். ஒரு நாளைக்கு தேவையான சில மணி நேரங்கள் மட்டும் குழந்தைகளுக்கு டயபரை போட்டு விடலாம். இரவில் மட்டும் டயபர் போடும் பழக்கம் இருந்தால் டயபரில் குழந்தை சிறுநீர் கழித்ததும் தூக்கம் கலையாமல் அதை கலட்டிவிடடுவது அவசியம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top