நலம் உண்டாகும் நவகிரஹ ஸ்த்தலங்கள்!
  • 12:16PM Nov 16,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:16PM Nov 16,2017 Chennai, Tamil Nadu 600003, India

இந்து மதத்தில் நவ கிரஹ வழிபாடு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கை நெறிகளை உள்ளடக்கியதாகும்.நவ கிரஹ வழிபாடு மனிதன் வாழ்க்கைக்கு நலம் உண்டாவதற்கும்,மேலும் வளர்ச்சி அடைவதற்கும் வழி உண்டாக்குவதாக இந்து புராணங்கள் கூறுகின்றன..அப்படிப்பட்ட நவ கிரஹ ஸ்தலங்கள் பற்றி பார்ப்போம்..

 

1.சூரியனார் திருக்கோவில்

  Related image

  கும்பகோணம் பக்கத்தில் உள்ள ஆடுதுறையில் உள்ளது சூரியனார் கோவில்..நவகிரஹ வழிபாடு ஸ்தலங்களில் முதல் வழிபாடு தலமாக விளங்குவது சூரியனார் திருக்கோவில்..இந்தக் கோவில்  முதல் குலோத்துங்க சோழ அரசரால் கி.பி 1100 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இங்கு ஜென்ம சனி,அஷ்டம சனி மற்றும் கிரஹ தோஷம் உள்ளவர்கள் வந்து வழிபட்டால் நன்மை உண்டாகும்.!

 

2.திங்களூர் கைலாசநாத திருக்கோவில்

Image result for thingalur chandran temple

   நவ கிரஹ வழிபாட்டில் இரண்டாவதாக உள்ளது சந்திர கிரஹ வழிபாடு.! திருவையாறு பக்கத்தில் உள்ள திங்களூர் எனும் ஊரில் இந்தக் கோவில்  உள்ளது..சந்திர பகவான் இங்கு அருள்புரிவதால் இந்த ஊர் திங்களூர் என்னும் பெயர் பெற்றது.சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் தீர்ந்து வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும் என்பது ஐதீகம்.

 

3.வைத்தீஸ்வரன் திருக்கோவில்

Image result for vaitheeswaran temple

  நவ கிரஹ வழிபாட்டில் மூன்றாவதாக வழிபடுவது செவ்வாய் கிரஹ வழிபாடு.! சீர்காழியில் அமைந்துள்ள இந்தக் கோவிலில்  செவ்வாய் கிரஹ வழிபாடு பிரசித்தி பெற்றது.காவேரி ஆற்றின் வடக்கில் அமையப்பெற்ற இந்தக் கோவிலில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வந்து வழிபடுவது நல்லது.!

 

4.ஸ்வதரஙஈஸ்வரர் திருக்கோவில்

Related image

     நவ கிரஹ வழிபாட்டில் நான்காவதாக வழிபடுவது புதன் கிரஹ வழிபாடு.! திருவெண்காடு புதன் கோவில் என்று அழைக்கப்படும் இந்த ஸ்வதரஙஈஸ்வரர் திருக்கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு வந்து புதனை  வழிபட்டால் கல்வி ஞானம் பெருகும் என்பது ஐதீகம்.

 

5.ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

Related image

   நவ கிரஹ வழிபாட்டில் ஐந்தாவதாக வழிபடுவது குரு வழிபாடாகும்.! ஆலங்குடியில் உள்ள இந்தத் திருக்கோவில் அகஸ்திய முனி வழிப்பட்ட ஸ்தலமாகும்.

 

6.அக்னீஸ்வரர் திருக்கோவில்

Related image

   நவ கிரஹ வழிபாட்டில் ஆறாம் இடத்தில் இருப்பது சுக்கிரன் வழிபாடாகும்.! கஞ்சனூரில் அமைந்துள்ள  இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இங்குச் சுக்கிரன் பகவானுக்குத் தனி சந்நிதி கிடையாது,இங்கு  ஈசன் வடிவிலே சுக்கிரன் கட்சி தருகிறார்..சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது அவர்கள் வாழ்க்கையில் உள்ள இன்னல்களைப் போக்கும் என்பது ஐதீகம்.

 

7.திருநள்ளாறு சனி பகவான் திருக்கோவில்

Related image

  திருநள்ளாறில் உள்ள இந்தக் கோவில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.சனி பயிற்சியின் பொழுது இங்கு வந்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.

 

8.நாகநாத ஸ்வாமி திருக்கோவில்

Image result for keezhaperumpallam kethu temple

  திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோவில் நாக தோஷம் உள்ளவர்கள் வந்து வழிபடக்கூடிய முக்கிய ஸ்தலமாகும்.திருமணம் சீக்கிரம் கைகூட இங்கு வந்து ராகு பூஜை மேற்கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

 

9.கீழப்பெரும்பள்ளம் கேது நவகிரஹ திருக்கோவில்

Image result for keezhaperumpallam kethu temple

   இந்தக் கேது பகவான் திருக்கோவிலில் தீராத நோய் உள்ளவர்கள்,கடன்தொல்லை,ஏழ்மை போன்றவற்றில் சிக்கித்தவிப்பவர்கள் வந்து கேது பகவானிற்கு பூஜை செய்தால் நன்மை உண்டாகும் என்பது ஐதீகம்.

 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top