#Permanent Solution: கால் பித்தவெடிப்பை நிரந்தரமாக சரி செய்யவது எப்படி?
  • 18:24PM Aug 17,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 18:24PM Aug 17,2019 Kodambakkam

பாத வெடிப்பு என்பது பொதுவாக பலரால் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாகும், குறிப்பாக பெண்கள் சாராசரி வயதிற்கு மேல் இந்த பாத வெடிப்புகளால் பெரிதாக அவதிப்படும் நிலைமை உண்டாகின்றது. இந்த பாத வெடிப்பை குணப்படுத்த எத்தனையோ உக்திகளை நாம் பயன்படுத்தி இருப்போம். பலவகையான க்ரீம்களை கடைகளில் வாங்கி பயன்படுத்தி இருப்போம். சில நாட்களுக்கு கேட்கும் ஆனால் நிரந்தரமாக பாத வெடிப்பை அந்த க்ரீம்களால் சரி செய்ய முடியாது.

11.jpg

சிலர் கால் பாதங்களை சுத்தமாக வைத்திருந்தால் இந்த பித்தவெடிப்பு மீண்டும் வராது என்று சொல்லுவார்கள், ஆனால் இருபத்திநான்கு மணி நேரமும் பாதத்தை எப்படி சுத்தமாக வைத்துகொள்ள முடியும். ஒரு வேலை நமக்கு ரெக்கைகள் இருந்தால் பாதம் தரையில் படாமல் பறந்துவிடலாம். என்ன செய்வது நமக்கோ ரெக்கைகள் கிடையாதே! இந்த பித்தவெடிப்பை இயற்கையான முறையில் அதும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி நிரந்தரமாக சரி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.   

12.jpg

வீட்டில் இருக்கும் மெழுகுவர்த்தியை ஒரு ஸ்பூன் அளவு துருவி அதை உருக்கி எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக கடுகு எண்ணெய்யைக் கூட பயன்படுத்தலாம். மெழுகுவர்த்தி திரவமாக இருக்கும் நிலையில் இரண்டு வைட்டமின் A காப்ஸ்யூலை சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் செய்தால் ஒரு பேஸ்ட் போன்ற மருந்து தயாராகும். இந்த பேஸ்ட்டை பித்தவெடிப்பு இருக்கும் இடத்தில் தடவுங்கள். நாம் தயாரித்து வைத்திருக்கும் இந்த பேஸ்ட்டை இரவு படுக்கும் முன்பு பாதங்களில் தடவிக்கொண்டு படுக்கலாம். சீக்கிரமாக பாத வெடிப்புகள் மறைந்து உங்கள் பாதங்கள் பொழிவு பெரும்.

15.jpg

பித்தவெடிப்பு ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று உடல் சூடு. நமது உடலில் அதிகப்படியான உஷ்ணம் உண்டானால் அது பாதத்தில் தான் வெடிப்புகளாக வெளிப்படுகின்றன. இரண்டாவது உடலில் தேவையான அளவு நீர்சத்து இல்லாமல் போவது அல்லது குறைவது. எப்போது நமது உடல் dehydrate ஆகின்றதோ அப்போது பாதங்களில் பித்தவெடிப்புகள் உண்டாகும். மூன்றாவது அதிகப்படியான அழுக்குகள் பாதகங்களில் இருந்தால் வெடிப்புகள் ஏற்படும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top