தமிழ் திரையுலகில் தற்பொழுது ரொம்பவும் பிசியாக இருக்கும் நடிகர் யார் என்றால் அது நம்ம சூர்யா அவர்கள் தான். இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் “காப்பான்” படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பில் பிசியாக இருக்கும் சூர்யா, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் “NGK” படத்தின் டீசர் டப்பிங்கிற்காக நேரம் ஒதுக்கி வந்துள்ளார். இந்த அசத்தலான செய்தியை NGK படத்தின் தயாரிப்பு நிறுவனமான “ட்ரீம் வாரியார்” தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமையுடன் பதிவிட்டுள்ளது. NGK படத்தின் டீசர் வரும் பதினான்காம் தேதி வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சரியாக காதலர் தினத்தை படத்தின் டீசரை வெளியிடும் தேதியாக முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.
NGK படத்தின் டீசருக்காக நடிகர் சூர்யா மற்றும் ராகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் டப்பிங் செய்யும் புகைப்படங்களையும் ட்ரீம் வாரியார் தயாரிப்பு நிறுவனம் அந்த குறிப்பிட்ட டுவிட்டர் பதிவுடன் இனைத்து பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்பொழுது சூர்யா ரசிகர்கள் இடைய வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் டீசர் காதலர் தினத்தன்று சரியாக ஆறு மணி அளவில் வெளியாகும் எனவும் புதிய அறிவிப்பு வந்துள்ளது.