#SpaceTour: வெளியூருக்கு Tour போய் அலுத்து போச்சா..! கவலைய விடுங்க அடுத்த வருஷத்துல இருந்து விண்வெளிக்கு Tour போகலாம்..!
  • 16:31PM Jun 08,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 16:31PM Jun 08,2019 Chennai

விண்வெளியில் அமெரிக்கா,ரஷ்யா உட்படப் பல்வேறு சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து International Space Station- அமைத்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்த International Space Station இனிமேல் சுற்றுலா தலமாக மாறவுள்ளது.இது குறித்த அறிவிப்பை NASA அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Image result for international space station

இது குறித்து அவர்கள் கூறுகையில்,வரும் 2020 முதல் இந்தத் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்றும் விண்வெளி மையத்தில் தங்க ஓர் இரவிற்கு இந்திய மதிப்படி படி 24 லட்சம் வரை ஆகும்.மேலும் இந்தப் பயணம் 30 நாள் கொண்ட பயணமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சிக்கும்,International Space Station பராமரிப்பிற்காகவும் போதிய நிதி இல்லாத காரணத்தால் NASA இந்த அதிரடி முடிவை எடுத்தாகக் கூறினார்.மேலும்,Space X போன்ற தனியார் நிறுவனங்களில் இருந்து ஆண்டுக்கு இரண்டு பேர் விண்வெளி மையத்திற்கு அழைத்துச்செல்லப்படுவதாகக் கூறினார்.இதற்கு முன்பு கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த Dennis Tito என்பவர் மட்டுமே பொதுமக்களில் இருந்து விண்வெளி மையத்திற்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top