சிவனைப் பற்றிய புரிந்துக் கொள்ளாத சில உண்மைகள்!!
  • 04:12AM Oct 23,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 04:12AM Oct 23,2017 Chennai, Tamil Nadu 600003, India

நாம் சிவனைக் கடவுளாக வழிபடுகிறோம்,எந்தச் சிவன் கோயிலிற்குச் சென்றாலும் நம்மை அறியாமல் ஒரு பயம்,ஒரு மரியாதை,ஒரு அமைதி உணர்வோம்..காரணம் நேர்மறை அதிர்வு என்றும் எடுத்துக்கொள்ளலாம் இல்லை கடவுளின் மேல் உள்ள பக்தி என்றும் கூறலாம்..அது ஏன் மற்ற கடவுளை பார்க்கவும் ஈஸ்வரனைப் பார்க்கவும் எதோ ஒரு வித்தியாசம் தோன்றுகிறது? நாம் செய்த தவறு சிவனைக் கடவுள் என்ற கண்ணோட்டத்தில் கண்டு அவரின் மற்ற ஆற்றல்களை என்ன மறந்து விட்டோம்...நாம் அறியாத அவரைப் பற்றிய சில ரகசியங்களை இதில் காண்போம்.

சிவதாண்டவம்: சிவன் கோவம் வந்தால் மட்டுமே தாண்டவம் ஆடுவர் என்பது எல்லாம் இல்லை.. இயற்கையாகவே சிவனிற்கு நடனம் மீது ஆர்வம் அதிகம்.! சந்தோஷம்,சோகம் ஏதுவாக இருந்தாலும் நடனம் அட துடங்கிவிடுவார்..!!தன் உணர்வை நடனத்திலேயே வெளிப்படுத்துவர்!!

Image result for shiva thandavam

காதல்&திருமணம்: நாம் இப்பொழுது காதலித்த பெண்ணை மணக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்..,ஜாதி,மதம் அனைத்தையும் பார்க்கிறோம்,காலங்கள் பல மாறினாலும்..ஆனால் நம்மைப் படைத்த அந்த இறைவனோ..தனக்குப் பிடித்த பெண்ணை எந்தப் பேதமும் பார்க்காமல் காதலித்து அவளைத் தன்னுடன் அழைத்து வந்து தன்னில் பாதியை அவர்களுக்குத் தந்தார்!!

 

செல்வமும் திருநீறும்:நாம் சிவன் கோயில் சென்றால் அங்குக் கொடுக்கும் திருநீற்றை அங்கையே வைத்து விட்டு வந்து விடுவோம்...அதே போல் ஈசன் எந்த அணிகலன்களையும் அணிந்திருப்பது இல்லை,தன் உடம்பு முழுவதும் சாம்பல்(திருநீர்) பூசியிருப்பார்..காரணம், இந்த உலகத்தில் எதுவும் சொந்தமல்ல,நீ கடைசியாக இந்த உலகில் விட்டுச் செல்லப்போவது இந்தச் சாம்பலைத்தான் என்று கூறவே அந்தத் தோற்றத்தில் உள்ளார்..

Image result for shiva in vibhuti

அன்பே சிவம்: அன்பே சிவம் என்று கூற பலகாரணங்கள் உண்டு அதில் முக்கியமான ஒரு காரணம்.,பாவமே செய்தலும் தன்மீது அன்பு கொண்ட அவரது பக்தர்களை ஒரு பொழுதும் அவர் கை விட்டது இல்லை..அசுரனாக இருக்கட்டும் சித்தராக இருக்கட்டும் மன்னனாக இருக்கட்டும்.,அவர்களது அன்பிற்கு ஒரு பொழுதும் தீங்கு நேரிட அனுமதித்தது இல்லை.!

Image result for anbe shivam god

சிவபானம்: நாம் இன்று கஞ்சா என்று கூறுவதைச் சித்தர்கள் யோகிகள் சிவபானம் என்று கூறுவார்கள்..சிவன் கஞ்சா அடித்தது ஒரு பக்கம் உண்மை என்று கூறினாலும் ஏன் அதை உபயோகித்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தன்னிலையில் இருந்து மற்ற பரிமாணத்தைப் பற்றிச் சிந்திக்கவே ஒரு போதை தேவைப்பட்டது.. கஞ்சா, புகையிலை போன்றவையல்ல..ஒரு இனம் புரியாத நிலையை,நாம் யோசிக்கும்,சிந்திக்கும் நிலையை அதுக்கேற்றார் போன்று நம்மை ஒரு பரிமாணத்தை அடையச் செய்யும்..இதனாலேயே அந்த இறை உணர்வைப் பெற அன்றைய நாள் யோகிகள் சிவபானம் உபயோகித்தனர்..சிவனும் தன் நிலை அறியாது ஒரு புது உணர்வைப் பெற இந்தக் கஞ்சாவை உபயோகித்தார் என்று சில புராணங்கள் கூறுகின்றன..

முழுமுதற் கடவுள்: சிவனை முழுமுதற் கடவுள் என்று கூறுவதற்கு ஒரு முக்கியக் காரணம்..ஆலகால விஷத்தை எந்தத் தேவரும் அருந்த விரும்பவில்லை,யாரும் முன்வரவும் வில்லை..ஆனால் சுயநலமற்ற ஒருவரே அதை எடுத்துப் பருகினார்..! சுயநலம் இல்லது பருகியது தொண்டையுடன் நின்றது!

அர்த்தநாரீஸ்வரர் :சக்தியை சேர்ந்ததே சிவன் என்பதே அர்த்தநாதீஸ்வரன் ஆகும்..

இதில் ஆணில் பாதிப் பெண் என்பதையும் ஆண்களுக்கு உலகில் என்ன உரிமை இருக்கிறதோ அது பெண்ணிற்கும் இருக்கிறது என்று உணர்த்துவத்திற்கே இந்த உருவம் அடைந்தார்..இதில் சக்தி சிவனின் இடப்பக்கம் தோன்றுவர்..காரணம் இதயம் இன்றி உயிர் இல்லை,பெண் இன்றி உலகம் இல்லை என்பதே ஆகும்..!!

 

Top