#EL DORADO: தோண்டத் தோண்ட! சுரண்டச் சுரண்ட தங்கம்!! ஆராய்ச்சியாளர்களை மிரளவைத்த தங்க நகரம்!!!
  • 23:07PM Feb 10,2020 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 23:07PM Feb 10,2020 Kodambakkam

பொதுவாக தங்கம் என்றாலே நாம் அனைவரிடமும் ஒரு விதமான ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. நமக்கு மட்டும் அல்ல உலகத்தில் இருக்கும் பெருவாரியான மக்களுக்கும் அப்படித்தான். உலக மக்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உலோகம் தங்கம் தான் என்கிறது ஒரு சர்வே. பல ஆண்டுகளுக்கு முன்னாள் இந்த தங்கத்திற்காக போர்களே நடந்துள்ளது. மேலும் விலை மதிப்பற்ற தங்க புதையல்களையும், தங்கச் சுரங்கங்களையும் தேடிச்சென்று பலர் தங்களது விலை மதிப்பற்ற உயிர்களை இழந்தும் உள்ளனர். இப்படி இருக்கும் நமது வரலாற்றில் உண்மையிலேயே தங்க நகரம் என்று ஒன்று இருக்கிறது என்றால் மக்கள் விட்டுவிடுவார்களா என்ன? ஆம் உலகில் கைதேர்ந்த பல ஆராய்ச்சியாளர்களும், விசித்திரமான சுற்றுலாப் பயணிகளும் தேடிச்சென்ற “EL DORADO” என்ற மர்மமான தங்க நகரத்தைப் பற்றித்தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

1a.jpg

சரியாக 1531 AD-யில் ஜுவான் மார்டின்ஸ்     எனும் ஸ்பானிஷ் அதிகாரி தனது மரணப்படுக்கையில் ஒரு தங்க நகரம் பற்றிய மாபெரும் ரகசியத்தை உலகிற்கு எடுத்துரைத்தார். அவர் ஸ்பானிஷ் நாட்டு ராணுவப் படையில் இருந்து தனித்து விடப்பட்ட போது ஒரு சிறிய நிலப்பரப்பை அடைந்ததாகவும் அங்கிருந்த பழங்குடியினர் அவரது கண்களைக் கட்டி பதினைந்து நாட்கள் அழைத்துச்சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும் இலக்கை அடைந்ததும் கண்கள் அவிழ்த்து விடப்பட்டதாகவும். அங்கே அவர் கண்களுக்கு முன்னாள் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன தங்க நகரம் காட்சியளித்ததாகவும் கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த தங்க நகரத்தின் மக்களும், அரசரும் அவருடன் கனிவுடன் நடந்து கொண்டதாகவும், நகரத்தின் நடுவில் இருந்த நதிக்கரை ஓரம் மணலுக்கு பதிலாக தங்க துகள்கள் இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்து போனதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த தங்க நகரத்தை தான் “EL DORADO” என்று அழைத்தார் ஜுவான்.

1b.jpg

இந்த EL DORADO என்பது கிட்டத்தட்ட நமது இந்தியாவில் இருக்கும் கர்நாடக மாநிலத்தின் KGF என்ற இடத்தைப் போன்றது தான் என்கின்றனர் சிலர். தோண்டத் தோண்ட சுரண்டச் சுரண்ட தங்கம் இந்த தங்க நகரத்தில் தான் ஏழு வாரங்கள் தங்கி இருந்ததாகவும், பிறகு அந்த நகரத்தின் அரசர் தன்னை மீண்டும் ஸ்பெயினுக்கு அனுப்பிவிட்டதாகவும் கூறியுள்ளார் ஜுவான். இந்த நகரம் தென் ஆப்ரிக்காவின் கடைக்கோடியில் உள்ள கொலம்பியாவிற்கு அருகில் அமைந்துள்ளது என்று கண்டறிந்து அதைத் தேடி மீண்டும் சென்றுள்ளார் ஜுவான். ஆனால் அவரால் அந்த நகரத்தை கண்டுபிடிக்க முடியவில்லையாம். அவர் EL DORADO பற்றி எழுதிய கட்டுரையில் அந்த தங்க நகரத்தின் மக்கள் தங்கத்தை பெரிதாக மதிக்கவில்லை என்றும், வீடுகள், அரச விடுதிகள் மற்றும் கோட்டை ஆகியவை தங்கத்தால் உருவாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த நகரத்தில் ஒருவர் அரசராக பதவி ஏற்கும் போது அங்கிருக்கும் நதியில் அவரை அமரவைத்து தங்க நீரால் சுத்தப்படுத்த பாடுவாராம். தங்கம் ஒரு மனிதனை தூய்மைப் படுத்தும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்ததாகவும் கூறியுள்ளார் ஜுவான். இந்த தக நகரத்தைப் பற்றி அறிந்த பலரும் பல முறை முயற்சித்து தோல்வியடைந்து உள்ளனர். ஒரு ஆராய்ச்சியாளர் அந்த பழங்குடி மக்களை தேடி கண்டுபிடித்ததாகவும் ஆனால் அவர் தலை துண்டிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் அமேஸான் நதிக்கரையில் வாழும் பழங்குடியினர்களுக்கு அதிகப்படியான தங்கம் கிடைத்து வருவதாக கூறப்பட்டது. அவர்களிடம் கேட்டபோது நதியில் இருந்து தான் தங்கம் கிடைத்ததாக கூறியுள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top