#Morning Erection: நடுராத்திரியிலும், அதிகாலையிலும் ஆண்குறி விறைத்துக் கொண்டிருப்பது இயல்பான ஒன்றா?
  • 17:31PM Oct 14,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 17:31PM Oct 14,2019 Kodambakkam

சில நேரங்களில் அதிகாலை கண் விழிக்கும் போது சிலருக்கு ஆண்குறியானது விறைத்த நிலையை அடையும். தனிக்குடித்தனம் இருப்பவர்களுக்கும் தனியாக வாழ்பவர்களுக்கும் இது பிரச்சனை இல்லை. ஆனால் கூட்டு குடும்பத்திலோ அல்லது ஹாஸ்டலில் இருக்கும் நபர்களுக்கு இது பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும். “அடப்பாவி அவனா நீ?” என்று நண்பர்கள் கலாக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது பெரிய குற்றம் இல்லை என்றாலும் குற்றம் செய்ததற்கு சமமாக நம்மை எள்ளி நகையாடி விடுவார்கள். காலையில் எழும்போது ஆண்குறி விறைத்துக் கொண்டிருப்பது ஒரு சகஜமான நிலை தான். அதில் பிரச்சனை எதுவும் இல்லை. நாம் தூங்கும் போது, இது போன்று பல முறைகள் ஆண்குறி விறைக்கும், ஆனால் அப்போது நமக்குத் தெரியாது. தூங்கும் போது இரத்த ஓட்டம் அங்கே அதிகமாக பாய்வதால் ஏற்படும் வீக்கம் என்கின்றனர் மருத்துவர்கள்

3.jpeg

ஆண் குறியில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் தசைகள் தளர்வடைவதாலேயே ஆண்குறி விறைக்கிறது. இந்தச் சிக்கலான செயல்பாட்டில் பல்வேறு இடைப்பட்ட செயல்கள் உள்ளன, பல்வேறு நரம்பு மண்டலப் பகுதிகள் இதில் ஈடுபட்டுள்ளன. மூளை, முதுகுத் தண்டில் இருக்கும் நரம்பு மண்டலம் மற்றும் புற நரம்பு ஆகிய பகுதிகளில் உள்ள நரம்புகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. ஆண் குறி விறைப்பு செயல்பாட்டின் மீடியேட்டர் ஒரு நைட்ரிக் ஆக்சைடு ஆகும். அதுதான் ஆண் குறிக்கான இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் தசைகளைத் தளர்த்தி, ஆண் குறியில் உள்ள இடைவெளிகளில் இரத்தத்தை நிரம்பி, ஆண் குறியை விறைத்துகொள்ள செய்கிறது.

2.jpg

தூக்கத்தின் போது ஆண் குறி விறைப்பது விழித்திருக்கும் போது விறைக்கும் விறைப்பதில்யிருந்து வேறுபட்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இரவு நேரத்தின் போது ஆண் குறி விறைப்பதால் மற்றொரு நன்மையையும் ஆண்களுக்கு ஏற்படலாம். உறக்கத்தின் போது சிறுநீர் கழிக்காமல் தடுப்பது தான் அந்த நன்மை. அதாவது ஆண் குறி விறைத்திருக்கும் போது சிறுநீர் கழிக்க முடியாதபடி ஆண்களின் உடல் அமைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.சொல்லப் போனால், தூக்கத்தின் போது ஆண் குறி விறைப்பு ஏற்படாமல் இருப்பது ஆண்மையின்மையின் அடையாளமாக கூட இருக்கலாம். சில சமயம் வயதாவதால் ஏற்படும் ஆண்மை குறைவா அல்லது உளவியல் காரணங்களால் ஏற்பட்ட ஆண்மை குறைவா என்று வேறுபடுத்தி அறிந்துகொள்வதற்காக மருத்துவர்கள் NPT கண்காணிப்பு சோதனைகள் செய்யலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top