#Menopause: பெண்கள் மாதவிடாயைத் தள்ளிபோட மாத்திரைகள் சாப்பிடுவது சரியா? அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றித் தெரியுமா?
  • 16:46PM Oct 28,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:46PM Oct 28,2019 Kodambakkam

இது பலருக்கு அதிர்ச்சியை அளிக்கலாம், ஆனால் இது தான் உண்மை. பெண்கள் சில தேவைகளுக்காக தங்களது மாதவிடாய் நாட்களைத் தள்ளிப்போடுவதாக ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. கோயிலுக்கு செல்ல வேண்டும், வீட்டில் விஷேச நாட்களில் பூஜை செய்ய வேண்டும் என்று பல பெண்கள் ஒவ்வொரு மாதமும் இயற்கையாக ஏற்படும் மாதவிடாயை இந்த சில காரணங்களுக்காகத் தள்ளி போடுகின்றனர். பெரும்பாலும் பலரது வீட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்களைத் தனியே ஒரு அறையில் தங்க வைத்து விடுவார்கள். அவர்களுக்கென்று தனி தட்டு, படுக்கை அனைத்தும் தனியாக கொடுத்து ஏதோ தீண்டத்தகாதவர் போல வீட்டில் தள்ளிவைத்து விடுவார்கள். மாதவிடாய் காலத்தில் இப்படி தள்ளி வைக்கப்பட்ட பெண்களால் தெய்வ பூஜைகளில் கலந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்படும். அதனால் தான் பலரும் தங்களது மாதவிடாய் நாட்களை தள்ளி போடுவதற்காக மெடிக்கல் ஷாப்களில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனராம்.

12.jpg

இப்படி கண்ட மருந்தையும் பெண்கள் வாங்கி சாப்பிடுவதனால் அவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து தான் இதை அவர்கள் தொடருகின்றனர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பின் விளைவுகளைப் பற்றி கவலைக் கொள்ளாமல் தற்போது உள்ள பிரச்சனை தீர்ந்தால் போதும் என்று தான் பலரும் நினைக்கின்றனர். முன்னோர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியாக அறையில் இருக்க வைத்ததற்கு பல முக்கியமான காரணங்கள் இருக்கிறது. என்றால் அந்நேரத்தில் ஓய்வு தேவை. அந்த காரணத்தாலேயே அவர்களுக்கென்று தனியாக ஒரு இடம் கொடுத்தார்கள். ஆனால் நாளடைவில் அது தீட்டாக மாறி பலரும் தீண்டதாகத பெண்கள் என்று ஆக்கிவிட்டனர்.

page.jpg

எந்த ஒரு கடவுளும் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கோயிலுக்கு வரக்கூடாது, பூஜை செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. இப்போது உள்ளவர்கள் சாமி மீது அதீத மூட நம்பிக்கையில் இருக்கின்றனர் ஆனால் அதில் ஒரு பங்கு கூட உடல் நலம், ஆரோக்கியம் போன்றவற்றில் செலுத்தவில்லை. கடவுள் பெயரில் என்ன சொன்னாலும் நம்பப்படுகிறது என்பது தான் உண்மை. மாதவிடாயை தள்ளிபோட இப்படி கண்ட மாத்திரைகளை சாப்பிடுவதனால் மூளை செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய் போன்றவை வரக்கூடும். அதே போல ரத்த அழுத்தம், தலைவலி, ஒற்றை தலைவலி, உடல் பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் கண்டிப்பாக இந்த மாத்திரைகளை எடுத்துகொள்ளக் கூடாது. பெண்கள் இதனை சாப்பிடுவதால் பெரும் பிரச்சனைகளை பின்னாளில் சந்திக்க நேரும். தவறான புரிதலுக்காகவும், கடவுளின் பெயரிலும் மூட நம்பிக்கையின் உச்சத்திற்கு சென்று இது போன்ற அநாவசியமான செயல்களை செய்வதை பெண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top