“மங்காத்தா 2” வருமா வராதா? PART-1 பிரபலத்தின் பளிச் பதில்
  • 11:37AM Mar 09,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:37AM Mar 09,2019 Kodambakkam

தல அஜித் நடித்த மங்காத்தா திரைப்படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்ப்பார்ப்புகள் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். வெங்கட் பிரபு மற்றும் “தல” அஜித் குமார் கூட்டணியில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் “மங்காத்தா”. இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ் சினிமாவில் பார்ட்-2 சீசன் ட்ரெண்டாகி வருவதால், மங்காத்தா 2 எப்போது வரும் என இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்டு வரும் நிலையில், அஜித்துடன் நிச்சயம் ஒரு படம் பண்ணுவேன், ஆனால் அது மங்காத்தா 2-வா என தெரியாது என கூறியிருந்தார். இந்நிலையில், மங்காத்தா 2 திரைப்படத்தின் எதிர்ப்பார்ப்புகள் குறித்து நடிகை நடிகை ராய் லக்ஷ்மி பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

MV5BY2M4OTM0NWQtNDk3NC00NGJhLTk5YzMtY2Q4MjYxYWRiNzFjXkEyXkFqcGdeQXVyMjYwMDk5NjE@._V1_.jpg

மங்காத்தா திரைப்படம் எதிர்ப்பார்க்காத வெற்றியை எனக்கு பெற்றுத் தந்த திரைப்படம். தல அஜித் உட்பட இந்த படத்தில் அனைவருக்குமே நெகட்டிவ் ரோல், அதிலும், நெகட்டிவ் ரோலில் நடித்த ஒரே பெண் நான் தான். ஒருவேளை மங்காத்தா 2 திரைப்படம் அறிவிக்கப்பட்டால், அதே கதையின் தொடர்ச்சியா அல்ல வேறு கதையா என்பது தெரியாது. ஆனால், அறிவிப்பு வெளியானதும் மங்காத்தா படத்தில் நடித்த அனைவரும், எனக்கு என் கேரக்டர் வேண்டும் என வெங்கட் பிரபு அலுவலகத்தில் சென்று அமர்ந்துவிடுவோம் என்றார்.

page.jpg

Top