இந்த வயசுல! இது உங்களுக்கு தேவையா மஞ்சு?
  • 18:11PM Dec 06,2018 Thiruvananthapuram
  • Likes
  • 0 Views
  • Shares

மலையாள திரையுலகில் தற்பொழுது மிக பிஸியான நடிகை மஞ்சு வாரியர் தான். இவர் நடிப்பில் கேரளா முழுவதும் சக்கை போடு போட்ட திரைப்படம் தான் “HOW OLD ARE YOU”. இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் ஜோதிகா நடித்த “36 வயதினிலே”. மலையாள சூப்பர் ஸ்டாரான திலீப் என்பவரின் முன்னாள் மனைவி மஞ்சு. நாற்பது வயதை தாண்டியும் தனக்கு நிகரான் ஒரு நடிகை மலையாள திரையுலகில் இல்லை என்ற நிலையை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார் மஞ்சு வாரியர். இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் மற்றும்ம் இயக்குனர் திரு.சந்தோஷ் சிவன் அவர்கள் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க மாறுபட்ட ஒரு கதைகளத்தை உருவாக்கி அதனை படமாக எடுத்துகொண்டு வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர்.

Manju_Warrier.jpeg

படப்பிடிப்பில் உண்மையான ஒரு ஆக்ஷன் காட்சியில் டூப் போடாமல் தைரியமாக நடிக்க சமத்தித்தார் மஞ்சு. எல்லாம் கட்சிதமாக இருந்தா நிலையிலும் நிலை தடுமாறி மஞ்சுவிற்கு விபத்து ஏற்பட்டது. நடந்த விபத்தில் அவரது நெத்தியில் நன்கு தையல் போடும் அளவிற்கு அடிபட்டுள்ளது என்று படக்குழுவினர் கூறுகின்றனர். கவசம் அணிந்திருந்தும் இந்த நிலை என்றால் கவசம் இல்லாமல் காட்சியில் அவர் நடித்திருந்தால் நிச்சையம் மண்டை உடைந்திருக்கும் என்றும் அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். அவர் மோகன்லாலுடன் நடித்த “ஓடியான்” திரைப்படம் வரும் பதினான்காம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like These
Related Stories
Top