#Breaking மதுரையில் ரயில் தண்டவாளம் அருகே குண்டு வெடித்தது - பீதியில் தமிழக மக்கள்..!
  • 14:21PM Mar 09,2019 Madurai
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:21PM Mar 09,2019 Madurai

your image

 

மதுரை ரயில் தண்டவாளம் அருகே இன்று காலை அதிபயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் சாலை  பகுதியில் ரயில்வே மேம்பாலத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள  மதுரை - போடி ரயில் பாதை அருகே இன்று காலை நாட்டு வெடிகுண்டு அதிபயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

குண்டு வெடிப்புக்கு முன்னர் அப்பகுதியில் மர்மமான முறையில் ஒரு பொருள்  கிடந்துள்ளது. அதுவே சிறிது நேரத்தில் ரயில் தண்டவாளம் அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்தது. குண்டு வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு வெடித்து சிதறியுள்ள பொருட்களை கைப்பற்றி தடயங்களை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top