#TransgenderStudents: சிறகடித்துப் பறக்க கதவை திறந்தது லயோலா கல்லூரி!
  • 16:56PM Jun 08,2019 Loyola College
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:56PM Jun 08,2019 Loyola College

“எதுக்குமே ஒரு ஆரம்பம் வேணு மாமு” இந்த வாக்கியத்தின் உண்மையான பொருளை நன்கு உணர்ந்திருக்கிறது பழமையும், பெருமையும் வாய்ந்த லயோலா கல்லூரி. இந்த காலத்தில் திருநங்கைகள் பலத்துறைகளில் தங்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து வருகின்றனர். அவர்கள் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் மேம்பட தமிழக அரசு ஏணிப்படிகளாக செயல்பட்டு வந்தாலும். சில அவலங்களால் பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமலேயே இருக்கிறது. இந்த தடையை தகர்த்தெறியும் காரியம் ஒன்றை செய்துள்ளது சென்னையில் உள்ள லயோலா கல்லூரி.

transgender_students_1559906003_725x725.jpg

தமிழகத்தில் பல பிரபலங்கள் படித்த கல்லூரி லயோல. இந்த கல்லூரியில் படிக்க ஆர்வத்துடன் பல ஆண்டுகளாக அணுகி வருகின்றனர் திருநங்கை மாணவர்கள். அவர்களது நீண்ட கால முயற்சிக்கு தற்பொழுது விடவு காலம் வந்துள்ளது. திருநங்கை மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான படிப்பை படிக்கவும், அதற்கான அனுமதியை வழங்கும் முன்வந்துள்ளது லயோலா கல்லூரி. லயோலா கல்லூரியில் திருநங்கைகளான 19 வயதாகும் மிருதுலா, BBM Animation பட்டப்படிபப்பை படிக்கவும். 21 வயதாகும் தியா French இலக்கியம் படிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11.jpg

இதைப்பற்றி லயோலா தலைமை கூறுவதாவது, “திருநங்கைகளுக்கு வாய்ப்பளிப்பது முதல் முறையல்ல, இதுவரை ஆறு திருநங்கைகள் எங்கள் கல்லூரியில் படித்து வாழ்கையில் வெற்றிபெற்றுள்ளனர். திருநங்கைகளுக்காக பணிபுரியும் சில NGOக்களுடன் இணைந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அத்தகைய மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமுதாயத்தில் ஒரு அங்கமாக ஆக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top