#Dropped: நடிகர் அஜித் குமார் அவர்களால் பாதியிலேயே கைவிடப்பட்ட திரைப்படங்கள்!!!
  • 11:06AM Oct 29,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:06AM Oct 29,2019 Kodambakkam

தமிழ் சினிமாவின் மிகவும் லேஸியான நடிகர் என்று நடிகர் STR அவர்களை கூறுகின்றனர். காரணம் அவர் கமிட்ட ஆனாலும் சரியான நேரத்திற்கு நடிக்க வரமாட்டார், அவரால் பல படங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவார் போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது கூறப்படுகிறது தான். ஆனால் தற்பொழுது முன்னையில் இருக்கும் பல நடிகர்கள் கூட இப்படி கதை பிடிக்கவில்லை, உடல் நலம் சரியில்லை என்று பாதியிலேயே விட்டுவிட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். இந்த வருசையில் நடிகர் அஜித் குமார் பாதியிலேயே கழண்டு வந்த காரணத்தால் நிறுத்தப்பட்ட படங்கள் என்னென்ன எனது பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகின்றோம்.

1a.jpg

#1. 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “சாருமதி” இந்த படத்திற்கு தேவா அவர்கள் இசையமைத்து பாடல் கூட வெளியாகி இருந்தது, நடிகர் அஜித் அவர்கள் பாதியிலேயே கழண்டு பைக் ரேஸுக்கு சென்றதால் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

#2. 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம் “மகா” இந்த படத்தை “நிக் ஆர்ட்ஸ்” தயாரிப்பில் “நந்தா பெரியசாமி” இயக்குவதாக இருந்தது. அஜித் குமார் போலீசாக நடித்து வடித்து வந்தார். தொடர்ந்து எட்டு நாள் படப்பிடிப்பு நடந்தது, ஒரு சண்டைக் காட்சியில் அஜித்திற்கு பலமாக அடிப்பட்டதாலும், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

#3. சிட்டிசன் படத்தை இயக்கிய சரவண சுப்பையா அவர்கள் அஜித் அவர்களை வைத்து “இதிகாசம்” என்ற படத்தை ஆரம்பித்தார் ஆனால் இந்த படமும் அஜித் அவர்களாலும், பொருளாதார பற்றாக்குறையினாலும் பாதியிலேயே கைவிடப்பட்டது.

#4. ஜனா படத்தின் இயக்குனர் மீண்டும் அஜித் குமார் அவர்களை வைத்து “திருடா” என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார். அஜித் அதில் காமெடி மருத்துவராக நடித்து வந்தார். முழு கதை பிடிக்கமால் போக அவர் பாதியிலேயே விளக்கிக் கொண்டார்.

#5. இயக்குனர் சரண் அவர்கள் இயக்கத்தில் அஜித் அவர்கள் நடிக்க ஆரம்பித்த  படம் “ஏறுமுகம்”. தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் கதை பிடிக்கவில்லை என்ற காரணத்தால் அஜித் பாதியிலேயே விளக்கிக் கொண்டார். பிறகு நடிகர் விக்ரம் ஆவர்களை வைத்து “ஜெமினி” என்ற பெயரில் படம் ஆரம்பத்தில் இருந்து எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது.

#6. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் இயக்கத்தில் அஜித் அவர்கள் நடிக்க ஆரம்பித்த படம் “மிரட்டல்”. படத்தில் கண்டிப்பாக மொட்டை போட வேண்டும் என்று கூறியதால் பாதியிலேயே விளக்கிக் கொண்டாராம் நடிகர் அஜித். பிறகு சூர்யாவை வைத்து “கஜினி” என்று தலைப்பு வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர்.

#Dropped - தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டு சுமார் 700 படங்கள் வெளியானதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. அதே சமையம் 1000-திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஒரு படத்தில் இருந்து பாதியிலேயே விளகுவதால் ஒரு நடிகருக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் கதை விவாதத்தில் இருந்து படத்திற்காக செலவு செய்த தயாரிப்பாளர்கள் தான் அதிகம் நஷ்டப்படுகிறார்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top