#Celebrations ஸ்பெயின்ல தாக்கலினா, எங்கூர்ல சாணி டா! தமிழகத்தில் நடைபெறும் மாட்டுச் சாணியடி திருவிழா!
  • 20:22PM Nov 07,2019 Tamil Nadu
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 20:22PM Nov 07,2019 Tamil Nadu

ஸ்பெயின் நாட்டில் La Tomatina என்ற பாரம்பரிய விளையாட்டு ஒன்றுள்ளது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவர்மேல் ஒருவர் தக்காளி அடித்து அதிலேயே புரண்டு விளையாடுவார்கள். இந்த விளையாட்டானது உலகளவில் மிகவும் பிரபலம். ஆனால் இந்தத் திருவிழாவுக்குச் சவால்விடும் அளவில் நமது தமிழ்நாட்டில் இதேபோல அற்புதமான விளையாட்டு ஒன்று கொண்டாடப்படுகிறது. ஒரேயொரு வித்தியாசம் மட்டும் தான்! ஸ்பெயின் நாட்டினர் தக்காளி அடித்து விளையாடுவார்கள், நமது தமிழ் நாட்டினர் சாணி அடித்து விளையாடுகிறோம்!!!

இந்த மாட்டுச் சாணியடி திருவிழாவை La Gobarina என்றும் அழைக்கலாம். இந்தத் திருவிழாவானது ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்தக் கும்டாபுரம் மலை கிராமத்தில் உள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் திருவிழாவாக நடைபெறும். தீபாவளி முடிந்து மூன்றாவது நாளில் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ள உள்ளூர் மக்கள் மட்டுமின்றிக் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்களாம். முதலில் சாமி ஊர்வலம் முடிந்து, பக்தர்கள் அனைவரும் தங்களின் வேண்டுதல்களை முடிந்தபின்பு இந்தச் சாணியடி திருவிழாவை கொண்டாடுவார்களாம். ஊருக்கு நடுவில் இருதரப்பினராகப் பிரிந்து ஒருவரின்மேல் ஒருவராகச் சாணி அடித்துக் கொண்டாடுவார்கள். இந்தத் திருவிழாமட்டுமின்றி இந்தக் கொண்டாட்டத்திற்கான வரலாற்று காரணமும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்த் தற்போது பீரேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை அங்குக் கொண்டுவந்த நபர் அந்தப் பகுதியில் கொட்டிவைத்திருந்த சாணத்தில் வீசிவிட்டுச் சென்றுவிட்டார். அப்போது அங்கு வேகமாக ஓடிவரப்பட்ட மாட்டுவண்டி அந்தச் சாணத்தில் இருந்த சிவலிங்கத்தின் மீது ஏறிச் சென்றுவிட்டது. அப்போது இறைவனின் லீலைகளில் ஒன்றாக அந்தச் சிவலிங்கத்தில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அங்கு ரத்தம் வடிவத்தைப் பார்த்த மக்கள் உடனே ஓடிவந்து அந்தச் சிவலிங்கத்தைத் தோண்டி எடுத்து அதற்குக் கோவில் கட்டி வழிபடத் தொடங்கியுள்ளனர். இப்படியிருக்கப் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊர் சிறுவன் ஒருவனின் கனவில் ஈசன் தோன்றி தீபாவளி முடிந்து மூன்று நாட்கள் கழித்துத் தான் சாணியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாகச் சாணியடி திருவிழாவை கொண்டாடும்படி கூறியுள்ளார். அதன்பின் தான் இந்தக் கொண்டாட்டத்தை இந்த ஊர்மக்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதுபோல ஆந்திரா மாநிலத்திலும் ஒரு சாணியடி திருவிழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top