#Real Stunt: கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் செய்த நிஜ ஸ்டன்ட் காட்சிகள்!!!
  • 23:43PM Oct 29,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 23:43PM Oct 29,2019 Kodambakkam

தமிழ் சினிமாவில் ஸ்டன்ட் கலைஞர்களின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒவ்வொரு சண்டைக் காட்சிகளிலும் ஹீரோவிற்கு பதிலாக ஸ்டன்ட் கலைஞர்கள் தான் டூப் போட்டு நடித்திருப்பார்கள். உயிரை பணயம் வைத்து கூட சில முக்கியமான காட்சிகளில் அவர்கள் நடித்திருப்பார்கள். ஆனால் இது வரை எந்த ஒரு திரைப்பட விழாக்களிலும் மிகவும் தத்ரூபமாக, உயிரை பணயம் வைத்து ஸ்டன்ட் காட்சியில் நடித்ததற்காக எந்த ஒரு ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் விருது கொடுப்பது இல்லை என்பது தான் சோகமான ஒரு உண்மை செய்தி. பெரும்பாலான நடிகர்கள் டூப் வைத்துக் கொள்வதற்கு காரணம் தயாரிப்பாளர்கள் அவர்களை நம்பி பல கோடிகளை முதலீடு செய்வது தான். தைரியமும் சாகசம் செய்ய நினைக்கும் சில முன்னணி அடிகர்கள் தாங்களாக முன்வந்து சில சண்டைக் காட்சிகளில் நிஜமாக நடித்தும் இருக்கின்றனர். அந்த காட்சிகள் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த காட்சிகளாகவும் அமையப் பெற்றிருக்கின்றது.

28cb2a45da1f5a42c77c857703a1ac4d.jpg

#1. “அயன்” படத்தில் ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்ட சில ரிஸ்க் நிறைந்த ஸ்டன்ட் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்திருந்தார் நடிகர் சூர்யா அவர்கள். அந்த சண்டைக் காட்சிகள் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் இருந்தது.

#2. “ராவணன்” படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விக்ரம் அவர்களை நடிகர் பிரித்விராஜ் துப்பாக்கியால் சுட்டுவிடுவார். அதனால் மலையின் உச்சியில் இருந்து நடிகர் விக்ரம் தூக்கி வீசப்படுவார். அந்த காட்சியில் டூப் போடாமல் சுமார் 6000 அடி பள்ளத்தில் கொஞ்சமும் பயம் இல்லாமல் நடித்தபடி நிஜமாக விழுந்தார் நடிகர் விக்ரம்.

#3. “பில்லா” படத்தின் இரண்டாம் பாகத்தில் 30000 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் நடிகர் வித்யுத் மற்றும் நடிகர் அஜித் சண்டைப் போடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து நடிகர் அஜித் குமார் நிஜமாக விழுந்து ஒற்றைக்கைப்பிடி உதவியுடன் அந்தரத்தில் தொங்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது, இது டூப் போடாமல் அவர் தைரியமாக செய்த நிஜ ஸ்டன்ட்.

#4. இயக்குனர் அட்லீ இயக்கிய “தெறி” படத்தில் 100 அடி உயரம் கொண்ட பாலத்தில் இருந்து ஆற்றில் நடிகர் விஜய் குதிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த காட்சியை டூப் போடாமல் நடித்திருந்தார் விஜய். என்னதான் கயிறு கட்டி இருந்தாலும், வேகமாக அடித்துக்கொண்டு வரும் ஆற்றில் நூறடி உயரத்தில் இருந்து நிஜமாக குதிப்பது மிகவும் ரிஸ்க்கானது என்று ஒரு பேட்டியில் இயக்குனர் அட்லீ கூறியதுடன் நடிகர் விஜயின் மன தைரியத்தையும் பாராட்டினார்.

#5. “கபாலி” படத்தில் நமது சூப்பர் ஸ்டார் ஒரு வில்லனை காரைவிட்டு ஏற்றி கொள்வது போன்ற காட்சிகள் மைக்கப்பட்டிருகும். அந்த காட்சியில் நிஜமாக காரை நமது சூப்பர் ஸ்டார் தான் ஓட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வயதில் அவர் இதை செய்தது மிகவும் பாராட்டக்கூடியது.

#Real Stunt – மேலும் “எந்திரன்” படத்தில் கார் ட்ரிஃப்ட் காட்சியிலும் நமது சூப்பர் ஸ்டார் டூப் போடாமல் காரை ட்ரிஃப்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top