கேரளா பள்ளி மாணவிகளைக் குறிவைத்து கற்பழிக்கும் கும்பல்!
  • 18:11PM Dec 06,2018 Chennai
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 18:11PM Dec 06,2018 Chennai

கேரளாவில் பள்ளி மாணவிகளைக் குறிவைத்து கடத்தி அவர்களைக் கற்பழித்து வரும் சில கும்பலால் மக்கள் பீதியில் உள்ளனர். இதுபோல இரண்டு சம்பவங்கள் தற்போது அங்கு அரங்கேறியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரசினி கடவு பகுதியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை பேஸ்புக் மூலம் நட்பு ஏற்படுத்தி பெண் ஒருவர் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். அந்த மாணவி இந்தப் பெண்ணை முழுமையாக நம்பியதும், அவளை ஒரு லாட்ஜூக்கு வரசொலியுள்ளார். இந்த மாணவியும் அவரை நம்பி அவர் கூறிய அந்த லாட்ஜூக்கு சென்றதும், அந்தப் பெண், இந்த மாணவியை ஒரு அறையில் தனியாக பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். பிறகு சிறிது நேரம் கழித்து 5 பேர் அந்த மாணவி இருந்த அறைக்குச் சென்று அவரைக் கொடூரமாக துன்புறுத்திக் கற்பழித்துள்ளனர். அந்த மாணவி சோர்வுற்று இருக்கும் போது, அவளை நிர்வாணபடுத்தி புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படத்தை காட்டி மிரட்டி மேலும் 20 பேர் அந்த மாணவியைப் பல முறை லாட்ஜூக்கு அழைத்துக் கற்பழித்துள்ளனர். இந்த விஷயம் அவர்கள் வீட்டுக்குத் தெரிந்து அந்த மாணவியின் தம்பி அவர்களைத் தட்டி கேட்கச் சென்றுள்ளார். ஆனால் அவனை அவர்கள் தட்டி உதைத்து அனுப்பிவிட்டனர். பின்னர் அந்த மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் அந்த 5 போரையும் கைது செய்தனர். இவர்களுடன் தொடர்புடைய 19 போரையும் காவல் துறையினர் கைது செய்ய முயற்சித்து வருகின்றனர்.

இதேபோல பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது அவரை காரில் வந்த கும்பல் கற்பழிக்கக் கடத்த முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த மாணவி சாதுரியமாக தப்பித்து பக்கத்தில் இருந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். அந்த வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போட்டதும் அந்த காரில் இருந்தவர்கள் தப்பித்து சென்றனர். பிறகு அந்த மாணவியின் பெற்றோர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த காரில் இருந்த கும்பலை கண்டுபிடிக்க முயற்சித்த போது செல்போன் டவர் மூலம் அவர்கள் பழனியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் விரைந்து வந்து அவர்களைக் கைது செய்தனர். அந்தக் கும்பல் தாங்கள் குடிபோதையில் இருந்ததால் ரோட்டில் சென்ற அந்த மாணவியைக் கற்பழிக்க முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளனர்.

Top