#Mexican Mint: புண்பட்ட நெஞ்சை கொஞ்சம் ஓவரா புகைவிட்டு ஆற்றியவர்களே!! கவலை வேண்டாம் கற்பூரவள்ளி இருக்கின்றாள்!!!
  • 15:53PM Sep 23,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 15:53PM Sep 23,2019 Kodambakkam

கற்பூரவள்ளி என்றால் இக்கால இளைஞர்களுக்கு வாழைப்பழம் தான் முதலில் நினைவிற்கு வரும். மருத்திவம் குணம் நிறைந்த கற்பூரவள்ளி இலை பற்றி கேட்டால் அப்படி ஒன்று இருக்கிறதா? என்று நம்மை திருப்பி கேட்பார்கள். வீட்டில் கிளி மற்றும் லவ் பேர்ட்ஸ் வளர்ப்பவர்களுக்கு இந்த கற்பூரவள்ளி செடி ரொம்பவும் பரிச்சயமானதாக இருக்கும். ஆனால் அவர்களுக்கும் இதன் உண்மையான மருத்துவ குணம் தெரியாது. மஞ்சளைப் போல இந்த கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இந்த செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் மரத்தின் 12 அடி விட்டம் வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது என்பார்கள். சித்தர்கள் இதனைக் கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம். வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். இப்படி பல நன்மைகளைத் தரும் கற்பூரவள்ளியின் மேலும் பல நன்மைகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

#1. தமிழக அரசு பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதித்தாலும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் புகைப்பிடிப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அவர்கள் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது. இவர்கள் கற்பூரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

3.jpg

#2. நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. ஒருவருக்கு வியர்வை வெளியேறாமல் இருந்தால் சருமத்தில் பல பிரச்சனைகள் உண்டாக வாய்ப்பிருக்கின்றது. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது. இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.

4.jpg

#Mexican Mint - காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top