#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள்! அதிகமாக வென்றது யார் தெரியுமா?
  • 16:45PM May 25,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:45PM May 25,2019 Kodambakkam

தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக, சரிசமமான ரசிகர் பட்டாளத்தை பெற்று, தன்னிகரற்ற நடிகர்களாக இறந்து செயல்பட்டு வருபவர்கள் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். சினிமாத்துறையில் இருவருக்கும் எந்த அளவிற்கு போட்டி இருக்கிறதோ அந்த அளவிற்கு நெருக்கமான நண்பர்களாக இருவரும் வருகின்றனர். இருவரும் இரநூறு படங்களுக்கு மேலாக நடித்துவிட்டனர். ஆனால் சில படங்கள் மட்டுமே இருவரின் நடிப்பில் ஒரே நாளில் வெளியாகியது. அந்த படங்கள் என்னென்ன யார் படம் வெற்றிபெற்றது யார் படம் தோல்வியடைந்தது என்று பார்க்கலாம் வாங்க.

#1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியானது “தாங்க மகன்” என்ற திரைப்படம் அதே நாளில் உலக நாயகன் நடிப்பில் வெளியானது தூங்காதே தம்பி தூங்காதே.

1.jpg

#2. உலக நாயகன் நடித்த சைன்ஸ் ஃபிக்ஷன் படங்களில் ஒன்று “எனக்குள் ஒருவன்” இந்த படத்திற்கு போட்டியாக வெளியானது சூப்பர் ஸ்டாரின் “நல்லவனுக்கு நல்லவன்”

2.jpg

#3. இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியானது “நான் சிகப்பு மனிதன்”. அதே நாளில் வெளியானது உலக நாயகன் நடிப்பில் உருவான “காக்கி சட்டை”

3.jpg

#4. சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான “படிக்காதவன்” இரநூற்றி முப்பதி ஐந்து நாட்கள் ஓடியுள்ளது. இது முக்கால் வருடத்திற்கு சமம். இந்த படம் வெளியான அதே நாளில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியானது “ஜப்பானில் கல்யாணராமன்”

4.jpg

#5. சூப்பர் ஸ்டார் நடிப்பில் “மாவீரன்” மற்றும் உலக நாயகன் நடிப்பில் “புன்னகை மன்னன்” படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

5.jpg

#6. சூப்பர் ஸ்டார் நடிப்பில் “மனிதன்” மற்றும் உலக நாயகன் நடிப்பில் “நாயகன்” படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

6.jpg

#7. சூப்பர் ஸ்டார் நடிப்பில் “வேலைக்காரன்” மற்றும் உலக நாயகன் நடிப்பில் “காதல் பரிசு” படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

7.jpg

#8. சூப்பர் ஸ்டார் நடித்த பல ரீமேக் படங்களில் “மாப்பிள்ளை” படமும் ஒன்று இந்த படம் வெளியான அதே தேதியில் வெளியானது நடிகர் பிரபு மற்றும் கமல் நடித்த “வெற்றிவிழா” திரைப்படம்.

8.jpg

#9. சூப்பர் ஸ்டார் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன படம் “பணக்காரன்” இதே தேதியில் உலக நாயகன் நடித்த தெலுங்கு படம் ஒன்று “இந்திரன் சந்திரன்” என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

9.jpg

#10. சூப்பர் ஸ்டார் நடிப்பில் “தளபதி” மற்றும் உலக நாயகன் நடிப்பில் “குணா” படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

10.jpg

#11. உலக நாயகன் நடிப்பில் வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படமான “தேவர்மகன்” படம் வெளியான அதே தேதியில் வெளியானது சூப்பர் ஸ்டாரின் “பாண்டியன்” திரைப்படம்.

11.jpg

#12. சூப்பர் ஸ்டார் நடிப்பில் “பாட்ஷா” மற்றும் உலக நாயகன் நடிப்பில் “சதிலீலாவதி” படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

12.jpg

#13. சூப்பர் ஸ்டாரை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் பிரபலப்படுத்தியது “முத்து” திரைப்படம் இந்த படம் வெளியான அதே நாளில் வெளியானது கமல் மற்றும் அர்ஜுன் இனைந்து நடித்த “குருதிப்புனல்” திரைப்படம். பாடல்களே இல்லாத தமிழ் படங்களில் முக்கியமானது இந்த படம்.

13.jpg

#14. சூப்பர் ஸ்டார் நடிப்பில் “சந்திரமுகி” மற்றும் உலக நாயகன் நடிப்பில் “மும்பை எக்ஸ்பிரஸ்” படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

14.jpg

#Nostalgic இந்த பதினான்கு படங்களுக்கு பிறகு இருவரின் படங்களும் இதுவரை ஒரே நாளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top