#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி!
  • 16:09PM Jul 16,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:09PM Jul 16,2019 Kodambakkam

எட்டு வருடங்களுக்கு முன்பாக நமது உலக நாயகன் அவர்களால் அறிவிக்கப்பட்ட ஒரு புதிய திரைப்படம், அறிவித்த வேகத்தில் கைவிடப்பட்டது. அந்த படத்தை பற்றி அவரிடம் கேட்ட பொழுது “தேவைப்படும் அந்த சரியான நேரத்தில் மீண்டும் இந்த படத்தை கையில் எடுப்பேன்” என்று கூறியிருந்தார். தற்பொழுது அந்த சரியான நேரம் வந்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ஒரு சுவாரஸ்யமான புகைப்படத்துடன் படம் பற்றிய அறிவிப்பை பதிவிட்டுள்ளார் நமது உலக நாயகன். படத்தின் தலைப்பு “தலைவன் இருக்கின்றான்”. உலக அரசியல் பேசும் இந்த படத்தை “லைகா” தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார் உலக நாயகன். நமது ஆஸ்கார் நாயகன் திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் இணைந்து படத்திற்கான இசை பணிகளை ஆரம்பித்துள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள். இந்த அறிவிப்பை புகைப்படத்துடன் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கடைசியாக “தெனாலி” படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan

A.R.Rahman

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top